மாரிதாஸ் பா.ஜ.கவில் இணையப்போவதாகத் தொடர் செய்திகள் வந்த நிலையில் மதுரை சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் மாரிதாஸ் வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று சென்னை வந்த மாரிதாஸ் அவர்கள் இன்று பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில் பாஜகவின் முக்கிய பொறுப்பாளரும் ஆர்.எஸ்.எஸ் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களையும் மாரிதாஸ் சந்தித்து பேசியுள்ளார்.
மாரிதாஸ் அரசியல் வருகிறாரா? என்றால் ஆம் அதற்கான மேல்மட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துவருகிறது. தேதி முடிவாகவில்லை , முழுமையான முடிவும் இன்னும் எட்டப்படவில்லை என்பது தன் உண்மை. தற்போதைய நிலவரம் என்கிறார்கள் மாரிதாஸ் ஆதரவாளர்கள்.மாரி தாஸ்,அண்ணாமலை சந்திப்பு,பின் அவர் பாஜகவில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியது.
அண்ணாமலை மாரிதாஸ் இருவரும் கூடித் தெளிவான முடிவுக்கு வருவது முக்கியம் என்று மேல்மட்ட தலைவர்கள் நினைத்தார்கள். அது தற்போதுநிறைவடைந்துள்ளதாகவும் பா.ஜ.க வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுளளது. மேலும் ரஜினி அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டதால் மாரிதாஸ் தீவிர மோடி ஆதரவாளர் என்பதாலும் பாஜகவின் அடுத்த கட்ட நடவடிக்கையாக மாரிதாஸ் பாஜகவில் இணையும் நேரத்தை குறித்து விட்டார்கள்
மாரிதாஸ் தன் சமூக வளைத்தளத்தில் வலது சாரி ஆதரவாளர்களை ஒருங்கிணைத்தவர் என்று கூட கூறலாம்.. அவரின் வீடியோக்கள் அனைத்தும் அனைத்து மட்டத்திலும் பரவியது. ரஜினி ரசிகர்கள் மாரிதாஸ் ஆதரவாளர்கள் என மாறினார்கள்.தற்போது தமிழக இளைஞர்கள் சமூகவலைத்தள பேச்சுக்களை அப்படியே நம்பி விடுகிறார்கள். பிரிவினைப்பேசும் இளைஞர்களாக தமிழகத்தில் மாறிவருகிறார்கள்.
திருமுருகன் காந்தி, சீமான், கம்யூனிஸ்ட், உதயநிதி என பல அரசியல் தலைவர்கள் இளைஞர்களின் மத்தியில் பல பொய்களை கூறி பிரிவினைவாதம் எனும் விஷமத்தை பரப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நேரத்தை விட்டால் இனி வேறு நேரம் தமிழக பா.ஜ.கவிற்கு கிடைக்காது என்பதால் அடுத்ததத்த கட்ட நகர்விற்கு செல்கிறது அதுதான் மாரிதாஸ் இணைப்பு என்கிறார்கள்.பாஜகவை வலுப்படுத்த அடிப்படைவாதிகள் அல்லாமல் இளைஞர்கள் ஏற்கும் விதமான நகர்வு இருக்க வேண்டும். பாஜக தெளிவாக உள்ளது.
எனவே ஸ்டாலின் , திமுக என்று மேல்மட்ட எதிர்ப்பு தாண்டி அந்த அந்த பகுதி மக்களுக்கான தீவிர அரசியல் போராட்டங்களை திமுகவிற்கு எதிராக நடத்த வேண்டும். என அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது தமிழக பாஜக. கிடைக்கும் தகவல்படி பாஜக வின் தலைவர்களளோடு கலந்துரையாடிய பின் தமிழக பாஜகவில் இணையலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தான் பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில் பாஜகவின் முக்கிய பொறுப்பாளரும் ஆர்.எஸ்.எஸ் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களையும் மாரிதாஸ் சந்தித்து பேசியுள்ளார்.
மாரிதாஸ் அரசியல் உள்ளே வருவது மேல்மட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது மட்டுமே உண்மை.