பாஜக எம்.பிக்களுக்கு மட்டுமல்ல, எல்லா தம்பிகளுக்கும்தான். பிரதமர் அறிவுரை ‘பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே… அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே….. அனைவருக்கும் வணக்கம்.டெல்லியில் பாராளுமன்றக் கூட்டத் தொடர்கள் நடைபெறும் நேரத்தில், சிலர் தொகுதி அலுவல்கள் காரணமாகவோ தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் நிகழ்ச்சிகள் காரணமாகவோ வரவில்லை.
.ஏற்கனவே இதுபோன்ற கூட்டத்தொடரில் அனைத்து எம்.பி. க்களும் கலந்து கொள்ள வேண்டும் என்பதில் தீவிரம் காட்டும் பிரதமர் மோடி அவர்கள், தவறாமல் அனைவரும் எப்போதும் கலந்து கொள்ள வேண்டும் என பலமுறை அறிவுறுத்தியுள்ளார். தற்போது நேற்று டெல்லியில் நடைபெற்ற பாஜக எம்.பிக்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி தன் கட்சி எம்.பிக்களை கடிதோச்சி மெல்ல எறியும் வள்ளுவப்பாங்கில், கண்டித்துள்ளதாக அனைத்து ஊடகத்திலும் செய்திகள் வெளியானது…அதிகம் வலம் வரும் வாட்ஸப் உலாவில் பிரதமர் மோடி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து …. அறிவுரை என்று பட்டியல்கள் நீண்டன…
கட்சியை_பலப்படுத்துங்கள்:அலுவலகத்தில் உட்கார்ந்தால் கட்சி வளராது.எந்த கட்சியுடன் கூட்டணி வெற்றி பெறுவோம் என்று நினைப்பதைத் தள்ளி வையுங்கள். மக்களோடு மக்களாக பணியாற்றுங்கள்.* வீடு வீடாகச் செல்லுங்கள்.பணமும் அறிக்கையும் வெற்றியைத் தராது.ஒவ்வொரு 100 வாக்காளர்கள் இருக்கும் இடத்திலும் கமிட்டி போட்டு மக்களைச் சந்தியுங்கள்.
120 கி.மீ. வேகத்தில் காற்று வீசினாலும் சைக்கிள் டியூப்புக்குள் காற்று நிரம்பாது. நாம்தான் காற்றை அடைக்க வேண்டும்நம் கட்சியின் முன்னணித் தலைவர்கள் பலர் முன்னிலையில் பாரதப் பிரதமர் திரு. மோடி அவர்கள் பேசியபோது, “தயவுசெய்து பாராளுமன்றங்களில் நடைபெறும் கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்ளுங்கள். குழந்தைகளுக்குச் சொல்வதுபோல என்னால் எப்போதும் இதை உங்களிடம் வலியுறுத்திக் கொண்டிருக்க முடியாது.நீங்கள் மாறவில்லை என்றால் காலப் போக்கில் மாற்றங்கள் நிகழும். சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு கூட்டத்தொடருக்கு வாருங்கள். உங்களுக்கும் நல்லது. நாட்டு மக்களுக்கும் நல்லது” என பேசி உள்ளார் என்ற செய்திகளை எல்லாம் படிக்கும் போது….
நமக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை என்று என்னால் நினைக்க முடியவில்லை. நம் பிரதமர் வழங்கிய அறிவுரை கட்சியின் எம்.பிக்களுக்கு மட்டுமல்ல அவரின் தம்பிகளுக்கும்தான். ஆகவே நாம் எல்லோருமே நம்மை நாமே திரும்பிப்பார்த்துத் திருத்திக்கொள்ள அவர் ஒரு திறவுகோலைத் தந்திருப்பதாக நினைக்கிறேன்.பல சூழல்களை நாம் கடந்து வந்திருக்கின்றோம், ஆனால் இப்போது நமக்கு மிகச் சாதகமான சூழல் இருப்பதால், கட்சிக்கு நாம் வழங்கும் நேரமும், கவனமும், பொறுப்பும் அதிகரிக்கப்படவேண்டும் என்ற தேவை கட்சியின் எல்லா மட்டத்திலும் ஏற்பட்டுள்ளது.ஆகவே, நம் பிரதமர் ஆற்றியிருக்கும் உரை ஒரு ஊக்க சக்தியாக, உற்சாகப் பொற்புதையலாக, அமைந்து நம்மைச் செம்மை செய்து கொள்ள வாய்ப்பளித்தால், அதுவே மாறுதல் வேண்டும் நம் பிரதமருக்கு நாம் செய்யும் கைமாறு.
இன தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















