கிண்டியில் உள்ள ராஜ்பவனின் ஆளுநரை பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து திமுக அரசில் நடக்கும் அராஜகங்கள் குறித்து ரிப்போட் ஒன்றை அளித்துள்ளார். இந்த சம்பவம் திமுகவினரிடையே சற்று கிலியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் திமுக அரசின் நடக்கும் அவலங்களை விமர்சித்து வருபவர் பிரபல அரசியல் விமர்சகர் மாரிதாஸ். மாரிதாஸை கைது செய்ய நேரம் பார்த்து கொண்டிருந்தது திமுக அரசு. இந்த நிலையில் இராமநாதபுர மாவட்டம் சிறையில் மணிகண்டன் என்ற கல்லூரி மாணவனை காவல் துறையினர் அடித்து கொன்றதாக பிரச்சனை எழுந்தது. இது குறித்து மாரிதாஸ் தொடர் கருத்துக்களை வெளியிட்டு வந்தார். இது திமுக அரசிற்கு சற்று குடைச்சலை கொடுத்தது.
இதனை மனதில் வைத்து கொண்டு மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் திமுக அரசு மீது தவறான வகையில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தற்காகவும், வன்முறையை தூண்டியதற்காகவும் மதுரை நகரக் காவல்துறை மாரிதாஸை கைது செய்தது. சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் இவருக்கு எதிராக வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாரிதாஸை வரும் டிசம்பர் 23-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காவல்துறையையும் தமிழக அரசையும் கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று அறிக்கை வெளியிட்ட நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனின் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்து பேசினார். அவருடன் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சரஸ்வதி, பொதுச்செயலாளர் கரு. நாகராஜன், கராத்தே தியாகராஜன், டால்பின் ஸ்ரீதர், கு.க.செல்வம் சென்று இருந்தனர்.
ஆளுநர் அண்ணாமலை இடையே நடைபெற்ற இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.தி.மு.க.வுக்கு எதிரான 300-க்கும் மேற்பட்ட பதிவுகளின் நகல்கள் ஆளுநரிடம் வழங்கப்பட்டுள்ளது. இது திமுக தரப்பில் சற்று கிலியினை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பா.ஜ.க இளைஞரணி தலைவர் ஒருபடி மேல் சென்று திமுக தலைவரும் தற்போதைய முதல்வருமான முக ஸ்டாலினை கைது செய்ய வேண்டும் என்று ஒரு ட்வீட் செய்துள்ளார். ஸ்டாலின் இந்துமத சடங்குகளை இழிவுபடுத்தி பேசிய வீடியோ ஒன்று வைரலாக பரவியது. வேறு மத கல்யாணத்தில் கலந்து கொண்டு இந்து மத கல்யாணத்தில் ஓதப்படும் மந்திரங்கள் கேவலமானது என மிகவும் இழிவாக பேசினார். இது மத மோதல்களை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்குகள் பதியப்பட்டது ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பாஜக இளைஞரணி தலைவர் போட்ட ட்வீட் பேச்சாலோ, எழுத்தாலோ அல்லது சைகையாலோ மத, இன, மொழி சாதி, சமய சம்பந்தமான விரோத உணர்ச்சிகளை தூண்டிவிட முயற்சி செய்வது குற்றமாகும். … இந்து மத சடங்குகளை இழிவுபடுத்திய @mkstalin மீது பிரிவு 153A கீழ் எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்!
இதன் காரணமாக திமுகவினர் தேசம் மற்றும் இந்து மதத்திற்கு எதிராக பேசிய பேச்சுக்கள் அனைத்தும் பாஜகவினரை சேகரிக்க அண்ணாமலை உத்தரவிட்டுள்ளதாகவும் மேலும் அது குறித்து வேறு மாநிலங்களில் வழக்கு பதியப்பட்டு நடவடிக்கை எடுக்க முயற்சிகள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.