மத்திய அரசு ஆலோசனையில் உள்ள, ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது., அவ்வாறு மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை கொண்டு வந்தால் தமிழகத்தில் தி.மு.க.,வின் ஆட்சி, அதிகாரம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே நீடிக்கும்,” என,எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறியது பரப்பப்பினை ஏற்படுத்தியுள்ளது.
திமுக அரசு பதவியேற்ற நாள் முதல் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்தாதமால் வீடியோ போட்டோ சூட் விளம்பரங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. இதனை கண்டித்த கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் சேலத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி தலைமை வகித்து பேசினார்;
தி.மு.க., ஆட்சிக்கு வந்து ஏழு மாதங்கள் ஆகிறது. குடும்ப பெண்களுக்கு அறிவித்த மாத ஊக்கத்தொகை, 1,000 ரூபாய் எங்கே? மின் கட்டணம் மாதந்தோறும் கணக்கிடப்படும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி செய்யப்படும். நுாறு நாள் வேலை திட்டத்தை, 150 நாளாக உயர்த்தப்படும் என அறிவித்த விடியாத அரசு, எதையுமே செயல்படுத்தவில்லை.
தி.மு.க., ஆட்சியில் 557 கொலைகள் நடந்துள்ளன.மக்களுக்கு பாதுகாப்பில்லை.காவல்துறையினருக்கே, பாதுகாப்பு இல்லாமல், சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. திறமையில்லாத பொம்மை முதல்வர் ஆட்சி தான் காரணம்.ஆட்சி மாறும் போது காட்சி மாறும். அப்போது, அ.தி.மு.க., தகுந்த பதிலடி கொடுக்கும். நாங்கள் ஆட்சியில் இல்லை என்றாலும், மக்கள் பணி தொடரும்.
மத்திய அரசு அறிவித்தப்படி, ஒரே நாடு; ஒரே தேர்தல் நடைமுறைக்கு வந்தால், தி.மு.க.,வின் ஆட்சி; அதிகாரம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே நீடிக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.
தேனி, பங்களாமேட்டில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமை வகித்து பேசியதாவது:தமிழக மக்களின் ஜீவாதாரமான காவிரி, முல்லை பெரியாறு அணை பிரச்னைகளில் வழக்குகள் நடத்தி அ.தி.மு.க., அரசு வெற்றி கண்டது. கம்பத்தில் அ.தி.மு.க., நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு பிறகே, முல்லை பெரியாறு அணையில் நான்கு முறை 142 அடி நீர் தேக்கப்பட்டுள்ளது.
நிர்வாகத்திறமை இன்றி தி.மு.க., அரசு உள்ளது. ஆண்டுக்கு 10 லட்சம் வேலை தருவதாக கூறி இளைஞர்களை ஏமாற்றியுள்ளனர். தி.மு.க.,வின் விடியாத ஆட்சியில், விலைவாசி உயர்வால் பொதுமக்கள்சிரமப்படுகின்றனர்.
மக்கள் வீதியில் இறங்கி போராடும் காலம் நெருங்கி விட்டது. வாக்குறுதிகளை உடனே நிறைவேற்றுங்கள். இல்லாவிட்டால் ஆட்சி எங்களிடம் வந்து சேரும். இவ்வாறு அவர் பேசினார்.போலீசார் வழக்குஇந்த போராட்டம் தொடர்பாக, பன்னீர் செல்வம் உட்பட தமிழகம் முழுதும் பல ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















