பாண்டிச்சேரி மாதிரியே பஞ்சாபிலும் நிகழும்-ஏபிபி நியூஸ் பஞ்சாபில் தேர்தலுக்கு முன் பல காங்கிரஸ் எம்எல்ஏக்கள்,எம்பிக்கள் பிஜேபியில் இணைய இருக்கிறார்கள் என்று ஒரு செய்தியை இன்று வெளியிட்டு இருக்கிறது.
அனேகமாக பாண்டிச்சேரியில் நடைபெ ற்றது மாதிரியே பஞ்சாபிலும் தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கவிழ்த்து ஜனாதிபதி ஆட்சியின் மூலமாக கவர்னர் கை களில் பஞ்சாப் ஆட்சி நிர்வாகம் அளிக்கப்படும் என்றே தெரிகிறது.இப்பொழுது உள்ள நிலையில் சுமார் 25 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி பிஜேபி மற்றும் அமிர்ந்தர்சிங்கின் கட்சியில் இணைய இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
23 எம்எல்ஏக்கள் காங்கிரசை விட்டு விலகினாலே பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து விடும் அனேகமாக ஜனவரி முதல் வாரத்தில் பஞ்சாபில் ஆட்சி கலைய நேரிடலாம்.ஏனென்றால் பஞ்சாப்,உத்தரபிரதேசம்,கோவா,உத்தரகாண்ட்,மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கு 2022 ஜனவரி முதல்வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.
இதில் பஞ்சாப்க்கு பிப்ரவரி முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறும் ஆனால் உத்தரபிரதேச தேர்தல் 7 கட்டங்களாக நடை பெறும் என்பதால் வாக்கு எண்ணிக்கை புதிய ஆட்சி என்று ஏப்ரல் முதல் வாரம் வரை ஆகும் என்பதால் அது வரை காங்கிரஸ் கைகளில் பஞ்சாப் ஆட்சி இருப்பதை பிஜேபி விரும்பாது.
இன்னொரு முக்கியமான விசயம் என்னவென்றால் வருகின்ற பஞ்சாப் சட்டமன்றதேர்தலில் பிஜேபி குறைந்தது 50 அதிகபட்சமாக 60 தொகுதிகளில் போட்டியிட இருக்கிறது .ஆனால் வேட்பாளர்களாக போட்டியிட பிஜேபியில் ஆட்கள் இல்லை என்பதால் இப்போதைய காங்கிரஸ் எம்எல்ஏக்களையே பிஜேபி வேட்பாளர்களாக நிறுத்த இருக்கிறது.
எனவே மிக அதிக அளவில் இப்போதை ய காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பிஜேபிக்கு வர இருக்கிறார்கள்.ஆக தேர்தலுக்கு முன் பாண்டிச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது மாதிரியே பஞ்சாபிலும் நிகழ்ந்து பஞ்சாபிலும் பிஜேபி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.ஆனால் பாண்டிச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் முதல்வர் பஞ்சாபில் பிஜேபி முதல்வர்.