பாஜக ஆளும் கர்நாடகாவில் மதம் மாற்றத் தடை சட்ட மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது.எதிர்க்கட்சிகள் எப்போதும் போலே தங்கள் எதிர்ப்பை காட்டினார்கள். கடும் அமளிக்கிடையே சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது தற்போது இந்தியா முழுவதும் பேசுபொருளாகி வருகிறது. மத்தியில் பாஜக ஆள்வதனால் எப்போது வேண்டுமாணாலும் இந்தியா முழுவதும் மத மற்ற தடை சட்டம் அமல்படுத்த வாய்ப்புகள் உண்டு.
கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் ஏற்கனவே -அருணாசல பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாசல பிரதேசம், சத்தீசுக்கர் அமலில் உள்ளன.மேலும் உத்திர பிரேதேசம் ,மத்திய பிரேதேசம் தற்போது கர்நாடக என பாஜக ஆளும் மாநிலங்களில் கொண்டு வரப்பட்டுளது. இந்தியாவில் 17 மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுவதும் ஆசை வார்த்தை கூறியும், வலு கட்டாயமாகவும் மதம் மாற்றப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மேலும் தென் இந்தியாவில் இது வைரஸை போல் தொற்றி உள்ளது. இதற்கு கிடுக்கிப்பிடி போடும் விதகமாக மதம் மாற்ற தடை சட்டம் கொண்டு வரப் போவதாக கர்நாடக மாநில பாஜக அரசு சில மாதங்களுக்கு முன்பே அறிவித்திருந்தது.இதனை தொடர்ந்து தற்போது அங்கு நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் இரண்டு நாட்களுக்கு முன் கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா ‘கர்நாடகா மதம் மாற்ற தடை சட்டம் – 2021’ என்ற சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.
இந்த மசோதா தொடர்பாக சட்டமன்ற கூட்ட தொடரில் நேற்று விவாதிக்கப்பட்டது. அப்போது காங்கிரஸ், ம.ஜ.த.,வினர் மத மாற்ற தடை சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் எதிர்க்கட்சியினரின் அமளிக்கிடையில் குரல் ஓட்டெடுப்பின் வாயிலாக இந்த மசோதா நிறைவேறியது.
இந்த மசோதாவை சட்ட மேலவையில் தாக்கல் செய்து நிறைவேற்றிய பின், ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க கர்நாடக அரசு தரப்பு திட்டமிட்டுள்ளது. இந்த சட்டம் அமலுக்கு வந்தால், மதம் மாற்றம் செய்பவர்களுக்கு குறைந்தபட்சம் மூன்று ஆண்டு முதல், அதிகபட்சமாக 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க முடியும். மேலும், 25 ஆயிரம் ரூபாய் முதல், ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்க முடியும்.
அடுத்த வருடம் தொடக்கத்தில் வரவுள்ள உத்திர பிரதேச தேர்தல் முடிந்ததும் பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களிலும் மதமாற்ற தடைச்சட்டம் கொண்டு வரப்படும் என டெல்லி வட்டரங்கள் தெரிவித்துள்ளார்கள். அதனை தொடர்ந்து இந்தியா முழுவதும் ஒரேமாதிரியான கட்டாய மத மாற்ற தடைச்சட்டம் கொண்டுவரப்படும். எனவும் தெரிகிறது.