இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இப்பொழுது காஷ்மீர் ஸ்ரீநகரில் பிறந்த விக்ரம் மிஸ்ரி நியமிக்கப்பட்டு இருக்கிறார்.2019 ல் இருந்து சீனாவில் இந்திய தூதுவராக இருந்து வந்த விக்ரம் மிஸ்ரா கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் அதாவது டிசம்பர் 11 ம் தேதி தான் சீனா தூதர் பொறுப்பை ராஜினாமா செய்து விட்டு இந்தியா வந்து சேர்ந்தார் விக்ரம் மிஸ்ரி
இந்தியா வந்தவுடனே அவருக்கு பெரிய பொறுப்பு அளிக்க இருப்பதாக செய்திகள் வெளி வந்தன.இந்த நிலையில் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஏற்கனவே இருந்த பங்கஜ் சரனை நீக்கி விட்டு அவருக்கு பதிலாக விக்ரம் மிஸ்ரியை துணை பாதுகாப்பு ஆலோசகராக கொண்டு வந்து இருக்கிறார்கள்.
இந்த இடத்தில் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விசயம் என்னவெனில் இந்தியாவின் ராணுவ தலைவர் பிபின் ராவத் டிசம்பர் 8 ம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். டிசம்பர் 11ம் தேதி சீனாவில் இருந்த இந்திய தூதராக இருந்த விக்ரம் மிஸ்ரியை இந்தியாவுக்கு வர வைத்து விட்டார்கள்.அடுத்து நெதர்லாந்தில் இந்திய தூதராகஇருந்த பிரதீப் குமார் ராவத்தை சீனாவுக்கு இந்திய தூதராக அனுப்பி விட்டது.
இந்திய அரசு.
பிரதிப் குமார் ராவத்தும் ஏற்கனவே சீனாவில் பல வருடங்களாக இந்திய தூதரகத்தில் இருந்தவர் தான் டோக்லாம் பிரச்சனையில் சீனாவை சமாளித்த அனுபவசாலி தான் பிரதீப் குமார் ராவத்.பிபின்ராவத் மரணம் நடைபெற்ற அடுத்த சில நாட்களில் சீனாவில் இருந்த இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி இந்தியாவுக்கு வர வழைக்கப்பட்டு அவருக்கு பதிலாக சீனாவில் பல வருடங்கள் இருந்த பிரதிப்குமார் ராவத் சீனாவுக்கு தூதுராக அனுப்பபட்டு இருக்கிறார்.
பிபின் ராவத் அவுட்- பிரதீப் ராவத் சீனா இன்..இது ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உள்ள நிகழ்வாகவே தெரிகிறது. அடுத்தும் சீனாவில் இருந்த விக்ரம் மிஸ்ரியை தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக அஜித் தோவல் அருகில் அமர வைத்து இருப்பதும் பிபின் ராவத் மரணம் உண்டாக்கிய தொடர்பு நிகழ்வு தான்.
1989-பேட்ச் ஐ.எப்.எஸ்., கேடர் ஆவார். மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) தலைமையகத்திலும், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் பணியாற்றினார். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் வட அமெரிக்காவில் உள்ள பல்வேறு இந்திய தூதரகங்களிலும் பணியாற்றியுள்ளார்.
சீனாவை பற்றி அனைத்து விஷயங்களும் தெரிந்த ஒருவரை தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டிருப்பது சீனாவிற்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. மேலும் சீனா இலங்கை உடனான தொடர்புகள் குறித்தும் பாகிஸதானிற்கு சீனா செய்து வரும் உதவிகள் என அனைத்தும் விக்ரம் மிஸ்ரி விரல் நுனியில் வைத்துள்ளவர்.
எனவே சீனாவிற்கு எதிராக அடுத்தடுத்து நடவடிக்கைகளை எடுத்து வரும் மோடி அரசு இந்த நியமனம் சீனாவிற்கு வைக்கப்பட்டுள்ள செக் என்று உலக நாடுகள் கூறியுள்ளது, மேலும் மோடியின் நடவடிக்கைகளை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றது. ஓமிக்ரன் வைரஸ் பரவலால் உலக நாடுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து வரும் நிலையில் இந்தியாவோ ஊரடங்கு இல்லை என அறிவித்துள்ளது. ஊரடங்கு போடுவார்கள் என எதிர்பார்த்த சீனாவிற்கு இது பெரும் அதிர்ச்சியாக அமைந்த நிலையில் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக விக்ரம் மிஸ்ரி நியமிக்கப்பட்டிருப்பது சீனவிற்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.