கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்றுக் கொள்ளுங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நகை கடனை தள்ளுபடி செய்வோம் என்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வாக்குறுதி கொடுத்தார். உதயநிதி ஸ்டாலின் அவர்களும் நகை கடன் தள்ளுபடி பற்றி பிரச்சாரமே செய்தார்.
இதை நம்பி ஏராளமானவர்கள் கூட்டுறவு வங்கிகளில் நகையை அடமானம் வைத்தனர். விவசாயிகள் நகையை அடமானம் வைத்து வருடக்கணக்கில் காத்து இருக்கிறார்கள். இப்பொழுது கடன் தள்ளுபடிக்கு தகுதியுள்ளவர்கள் என்று ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார்கள்.
அதில் 35 லட்சம் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி கிடையாது.13 லட்சம் விவசாயிகளுக்கு மட்டும்தான் தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவித்துள்ளார். மீதி விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி கிடைக்காது. அதே சமயம் அவர்களால் அடமானம் நகையை மீட்கவும் முடியாது காரணம் கூட்டுறவு வங்கிகளில் வட்டி செலுத்த வில்லையெனில் 6 மாதத்திற்கு பிறகு வட்டியை அசலில் சேர்த்து விடுவார்கள். இதனால் நகையை மீட்பதில் பணம் அதிகம் தேவைப்படும்.
அடமானம் வைத்த நகைகள் ஏலம் போகின்ற சூழ்நிலை உள்ளது. இதனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தள்ளுபடி கிடைக்காதவர்களுக்கு வட்டி சலுகை யாவது கொடுத்து விவசாயிகளின் நகையை மீட்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் ரத்து இல்லை என்பது சரியான நடவடிக்கை எனில்,அதேபோல் அரசாங்கத்தில் பணி புரியும் மகளீர் மற்றும் வங்கியில் பணிபுரியும் மகளிர்க்கு ஏன் அரசு பேருந்துகளில் இலவச பயணச் சலுகை கொடுக்க வேண்டும்.
அகவிலைப்படி உயர்வு, பொங்கல் போனஸ் பெறும் அரசு ஊழியர்களுக்கு ரேசன் கடையில் வழங்கும் நிவாரணம் எதற்கு.கொரானா பேரிடர் சமயத்தில் வேலையின்றி தவித்தோர்க்கும் நிவாரணம். வீட்டிலிருந்தே ஊதியம் பெற்றவருக்கும் நிவாரணம் இது நியாயமா?
7000 முதல் 10000 வரை ஊதியம் பெறுபவருக்கு இலவச பேருந்து நியாயம் 50000 முதல் 100000 ஊதியம் பெறுபவருக்கு இலவச பேருந்து நியாயமா என்பதை தமிழக அரசு யோசித்து இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பொங்கல் சமயத்தில் அகவிலைப்படிகள் மற்றும் போனஸ் என்று அரசு ஊழியர்களுக்கு கொடுத்துள்ளது தமிழக அரசு. இந்த வருடம் பொங்கலில் எந்தவித பணமும் கொடுக்காமல் வெறும் பொருட்களை கொடுப்பது பொதுமக்களிடத்தில் ஏமாற்றத்தையே தரும்.
இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் உதயநிதியை நெட்டிசன்கள் வெளுத்துவங்கி வருகிறார்கள்/ உதயநிதி எனும் புளுகுநிதி எனும் ஹாஸ்டக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. வீடியோவை காண https://youtu.be/WYtG3EJnrGo