ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை, ஒப்பந்த அடிப்படையில், பாக்ஸ்கான் நிறுவனம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்து அளிக்கிறது. இதில் சுமார் 2,000 பேர் பணிபுரிகின்றனர். டிசம்பர் 15 அன்று மதிய உணவு உட்கொண்ட சுமார் 200 பெண் தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, அருகே உள்ள மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து பாக்ஸ்கான் தொழிற்சாலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதே போல் தான் ஸ்டெர்லைட் பிரச்சனையும் ஆரம்பித்தது., ஐஃபோன் தயாரிப்பை மீண்டும் சீனாவுக்கு கொண்டு போக சீனா தன் விசுவாசிகளை கொண்டு செய்யும் சதி நாடகமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் சீனா தான் காரணம் என்ற செய்தி வெளிவந்துள்ளது இதுகுறித்து தி வீக் செய்தி ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது.
“ஃபாக்ஸ்கான் விவகாரத்தில் சீனாவின் கை” – தி வீக் செய்தி.
மாநில உளவுத்துறை அறிக்கையின் படி, ஃபாக்ஸ்கானில் பிரச்சினையை உருவாக்கியது சீனர்கள். தமிழகத்தில் அவர்களுக்கு இருக்கும் விசுவாசிகளை இடதுசாரிகளை கொண்டு காய் நகர்த்தி உள்ளது. தெரியானவந்துள்ளது. சென்னை சிப்கடில் ஐ போன் தயாரிக்கும் தொழிற்சாலையில் கலவரத்தை உருவாக்கியிருக்கிறார்கள் சீன விசுவாசிகள். ஃபாக்ஸ்கானில் மட்டுமில்லாமல், சென்னையில் இருக்கும் விஸ்ட்ரானிலும் பிரச்சினையை உருவாக்கி மூட வைத்தது சீனாவின் விசுவாசிகள் தான் ஃபாக்ஸ்கான் – விஸ்ட்ரான் இரண்டுமே ஆப்பிள் நிறுவனத்துக்காக இந்தியாவில் உற்பத்தி செய்பவை.
இந்த இரு நிறுவனங்கள் மட்டுமல்லாமல், Sanmina, Ford, PPG Asian paints, Enfield India Limited உள்ளிட்ட பல வெளிநாட்டு நிறுவனங்களிலும் இதே போல பிரச்சினையை கிளப்பியிருக்கிறது இந்த கூட்டம். இந்தியாவிலிருந்து தொழில்களை சீனாவுக்கு கொண்டு போக இம்மாதிரி வேலைகள் செய்கிறார்கள் என
லக்ஷ்மி சுப்ரமணியன் கட்டுரை எழுதியிருப்பது வியப்பாக உள்ளது
“செய்தியை” எழுதியிருப்பது “கவர்னர் பன்வாரிலால் என் கன்னத்தை கிள்ளிட்டார்” என்று குற்றம்சாட்டியவர் தான். லக்ஷ்மி சுப்ரமணியன். தமிழ் மாநில உளவுத்துறை அறிக்கையை ‘பிரத்தியேகமாக’ பார்த்து எழுதிய கட்டுரை என்று குறிப்பிடுகிறார்.
மேலும் தென்கொரியாவைச் சேர்ந்த ஹுண்டாய் மகிழுந்து நிறுவனத்தின் துணை நிறுவனமான கியா கடந்த மூன்று ஆண்டுகளாகவே இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளில்ஈடுபட்டிருந்தது . தமிழ்நாடு, மாராட்டியம் குஜராத், ஆந்திரா ஆகிய 4 மாநிலங்களில் தொழில் தொடங்குவது குறித்து கியா நிறுவனம் ஆய்வு செய்து வந்தாலும் கூட, தாய் நிறுவனமான ஹுண்டாய் திருப்பெரும்புதூரில் அமைந்திருப்பதால் அதையொட்டி தொழில் தொடங்க வேண்டும் என்பது தான் அதன் விருப்பமாக இருந்தது. இதுதொடர்பாக அரசுக்கும், கியா நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையே பல சுற்று பேச்சுக்கள் நடத்தப்பட்டு, கியா தொழிற்சாலை அமைக்க 390 ஏக்கர் நிலம் வழங்குவதற்கும் தமிழக அரசு ஒப்புக்கொண்டது. இதுகுறித்து 11.08.2016 அன்று சட்டப்பேரவையிலும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் தமிழகத்தில் நடந்த தொடர் போராட்டங்கள் ஸ்டெர்லைட் மூடல் எப்போது பார்த்தலும் எங்கு பார்த்தாலும் போராட்டம் கார்ப்பரேட் என்றாலே கெட்டவார்த்தை என்ற அளவிற்கு அவதூறு பரப்புதல் எதிராக ஊடகங்கள் என பல்வேறு சிக்கல்கள் காரணமாக 10,000கோடி தொழிற்சாலை ஆந்திராவுக்கு மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.