“நான் உதயநிதி ஸ்டாலின் பி.ஏ” பெண்ணை மிரட்டும் நபர் யார்?
தமிழக அரசில் வேலை வாய்ப்பு வாங்கிக் கொடுப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்டுள்ள நபர், தன்னை திமுக எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலினின் உதவியாளர் என்று பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தேன்மொழி 32, இவர் எம்.எஸ்.டபிள்யூ பட்டப் படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக சென்னையில் தேடி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரது தோழியின் மூலமாக சென்னையை சேர்ந்த ராஜேஷ் 29, என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். அதாவது உங்களுக்கு அரசு வேலை வாங்கிக்கொடுக்கிறேன். எனக்கு மிகப்பெரிய இடத்தில் செல்வாக்கு உண்டு என ஆசை வார்த்தை கூறி மயக்கியுள்ளார். இதனை நம்பிய தேன்மொழி அவரிடம் பல லட்சங்களை கொடுத்துள்ளார்.
ஒரு கட்டத்தில் இன்னும் பலரிடம் சொல்லி நிறைய பணம் வசூலித்து வாருங்கள் அவர்களுக்கும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கிறேன் என கூறியுள்ளார். இதனால் தேன்மொழியும் பலரிடம் வேலை வாய்ப்புக்காக பல லட்சங்களை திரட்டி கொண்டுபோய் கொட்டியுள்ளார். ராஜேஷ், தேன்மொழியிடம் இருந்து பணத்தை கறந்து நல்ல சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார். தேன்மொழி எப்போது வேலை கிடைக்கும், ஆட்சிதான் மாறிவிட்டதே என கூறியுள்ளார். அதற்கு ராஜேஷ் மலுப்பலான பதிலை கூறி சமாளித்து வந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த தேன்மொழி தற்கொலைக்கு முயன்றபோது அவரின் உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். முன்னரே திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தேன்மொழி புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புகாரை சம்பந்தப்பட்ட கந்திலி காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்போது விசாரணைக்காக ராஜேஷை அழைத்த போலீசார் அவருடன் நெருக்கமாக பழகி பணத்தை கறந்துள்ளார் என தெரியவந்துள்ளது. இதனால் தேன்மொழியின் புகாரை யாருமே கண்டுக்கொள்ளவில்லை. போலீசாரை தனது பாக்கெட்டில் வைத்துக்கொண்ட ராஜேஷ் மீண்டும் தேன்மொழியை ஆபாசமான வார்த்தையில் பேசி மிரட்டத்தொடங்கியுள்ளார். இவரை போன்று வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் ராஜேஷை நம்பி பலர் பணத்தை கொடுத்து ஏமாந்துள்ளது தெரியவந்துள்ளது. மோசடி நபரை உடனடியாக கைது செய்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில், தேன்மொழியை ராஜேஷ் மிரட்டி வரும் ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதாவது வெளிப்படையாக நடந்து கொண்டு என்மீது புகார் அளித்துள்ளார். இனிமேல் எனது ஆட்டத்தை பார்க்க போகிறாய் என மிரட்டும் ஆடியோ வெளியாகியுள்ளது. அதாவது நான் உதயநிதி ஸ்டாலினின் பிஏ., திங்கட்கிழமை ஆட்களை அழைத்து வா, அனைவரையும் வெட்டுகிறேனா, குத்துகிறேனா என்று பார்த்துக்கொள்கிறேன். நீ எங்க போய் சொன்னாலும் உனக்குத்தான் ஆபத்து என்று அந்த பெண்ணை மிரட்டி வரும் ஆடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக எம்.எல்.ஏ.,வா உதயநிதி ஸ்டாலின் தற்போது உள்ளார். அவர் இது போன்ற மோசடி நபர்கள் மீது தொடர்பு வைத்திருக்கும் பட்சத்தில் உடனடியாக ராஜேஷை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமும் ஆகும்.
Source, Image Courtesy: One India Tamil
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















