காஷ்மீரின் மலைப்பிரதேசத்தில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை கடும் பனிப்பொழிவிலும், ஸ்டெச்சரில் வைத்து ஆறு கிலோ மீட்டர் தூரத்திற்கு ராணுவத்தினர் தூக்கி வந்த வீடியோ வெளியாகியுள்ளது. எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் உள்ள கக்கார் பனிப்பிரதேசத்தில் கர்ப்பிணி பெண்ணிற்கு வலி ஏற்பட்டதால் மருத்துவ உதவி கேட்டு உள்ளூர் மக்கள் ராணுவத்தினரை தொடர்பு கொண்டனர். உடனடியாக ராணுவ மருத்துவக்குழுவுடன் அங்கு விரைந்த வீரர்கள், பெண்ணிற்கு சிகிச்சை அளிக்க முயன்றனர்.
எனினும், அந்த பெண்ணிற்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் இருந்ததால், கொட்டும் பனியிலும், ஆறரை கிலோ மீட்டர் தூரத்திற்கு அந்த பெண்ணை ஸ்டெச்சரில் வைத்து தூக்கி வந்தனர். விரைவாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட பெண்ணிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ராணுவத்தின் இந்த செயலால் நெகிழ்ச்சி அடைந்த உறவினர்களும், கிராம மக்களும் நன்றியை தெரிவித்து கொண்டனர்.
source thanthitv
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















