தி.மு.க ஆட்சி வந்தததும் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் பொங்கலுக்கு 5000 தருவாங்கனு விடியல் வந்துருச்சு என நம்பி ஒட்டு போட்டவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மின்சாரத்துறையில் ஊழல் போக்குவரத்து துறையில் ஊழல் என வரிசையாக திமுக அரசின் மீது குற்றசாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. ஆட்சி அதிகாரத்திற்கு வந்து 8 மாதம் தான் ஆனா நிலையில் 500 க்கும் மேற்ப்பட்ட கொலைகள் ரவுடிகளின் அட்டகாசம் என என விடியல் ஆட்சியின் சட்டம் ஒழுங்கு நிர்வாகமும் சீர்கெட்டுள்ளது.
மேலும் பொங்கலுக்கு 21 பொருட்ள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கிய விடியல் அரசு விளம்பரத்தில் குறை வைக்கவில்லை,ஆனால் பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட பொருட்களின் தொகுப்பில் குறை வைத்து விட்டது. தரமான பொருள் இல்லை, 21 பொருளுக்கு 18 பொருட்கள், பல்லி விழுந்த புளி,எடை குறைந்த பொருட்கள், எண்ணெய் போல் வடிந்த ஆச்சு வெல்லம் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.இதற்கு 2.15 கோடி ரூபாய் செலவில் வழங்கி வருகிறது. தரமில்லாத இந்த பொருட்களின் தொகுப்பு விலை 500 ரூபாய்க்கும் மேலே… அது 200 ரூபாயை தாண்டாது.. இதில் எவ்வளவு ஊழல் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் மஞ்சப்பை விளம்பரம் வேறு..
தமிழகத்தில் 2.15 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை அரசு வழங்குகிறது. இதற்காக, 1,297 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.பரிசு தொகுப்பில் இடம் பெற்றிருந்த தலா 50 கிராம் முந்திரி, திராட்சை; 10 கிராம் ஏலக்காய், முழு கரும்பு ஆகியவற்றை, ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்களே கொள்முதல் செய்தன. மற்ற அனைத்து பொருட்களையும், உணவு துறையின் கீழ் செயல்படும் நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்தது.
அதில், அரசின் ஆவின் நிறுவனத்திடம் இருந்து நெய் வாங்கப்பட்டது.வாணிப கழகம் கொள்முதல் செய்த பொருட்களில், துணி பையுடன் சேர்த்து ஒரு தொகுப்பிற்கு, 30 முதல் 40 ரூபாய் வரையும்; கூட்டுறவு துறை கொள்முதல் செய்ததில், கரும்புக்கு 6 ரூபாய் உட்பட, எல்லா பொருட்களுக்கும் குறிப்பிட்ட கமிஷன் வச்சி, கொள்முதல் நடந்திருக்கு; அதனால தான் பொருட்களின் தரம் மோசமாக இருந்திருக்குனு, முதல்வர் வரைக்கும் புகார்கள் போயிருக்காம்
விடியல் ஆட்சிக்கு வருவதற்கு முன் விவசாயிகள் வருமானத்தை அதிகமாக்கப் போறோம். விடியல் தரப்போறோம்னு சொல்லி ஆட்சிக்கு வந்தாங்க.. நல்லது செய்ற அதிகாரிகள் பலரையும் முடக்கி வெச்சுட்டு ஜால்ரா தட்டுற ஆளுங்களை வெச்சு வண்டி ஓடிகிட்டு இருக்கு. `இப்படியே போனா எப்பவும் விடியல் வராது’னு அதிகாரிகளே புலம்பிகிட்டு இருக்காங்களாம். விவசாயத்துக்குத் தனிப் பட்ஜெட் போட்ட அரசுன்னு பெருமை பேசிகிட்டாங்க. ஆனா, அதுல அறிவிச்ச திட்டங்கள் பெரும்பாலும் வெத்து அறிவிப்பு தான்னு சொல்றாங்க. இயற்கை விவசாயத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’னு சொன்னாங்க. ஆனா, இயற்கை விவசாயம் தொடர்பான ஃபைலை யாரும் தொடுறதே இல்லையாம். அதுனால நமக்குக் காசும் கிடைக்காது… ஒண்ணும் கிடைக்காதுனு அதை ஓரமா வெச்சுட்டாங்களாம்’’
தமிழக அரசு, குடும்ப அட்டைக்குப் பொங்கல் தொகுப்பு கொடுத்துகிட்டு இருக்கு. அதுல முழுக்கரும்பு ஒன்றும் கொடுக்குறாங்க. அந்தக் கரும்புல மட்டும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கூட்டுசேர்ந்து கோடிக் கணக்கான ரூபாய் லாபம் சம்பாதிச்சுட்டாங் களாம். விளைய வெச்ச விவசாயி வேதனையில இருக்காங்க. ஒரு கரும்புக்கு 33 ரூபாய்னு விலை நிர்ணயம் செஞ்சது அரசாங்கம்.
இந்தத் தடவை நமக்கு நல்ல விலை கிடைக்கப் போகுதுன்னு கரும்பு விவசாயிகளும் சந்தோஷமா இருந்தாங்க. இந்த அறிவிப்பு வர்றதுக்கு முன்னாடியே 40 சதவித விவசாயிகள் 5 ரூபாய்ல இருந்து 8 ரூபாய் விலையில கரும்பை வித்துட்டாங்க. மீதியிருக்க விவசாயிகள்கிட்ட 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரைக்கும் ஒவ்வொரு பகுதியிலயும் ஒவ்வொரு விலையில வாங்கியிருக்காங்க வியாபாரிக.
இது தொடர்பா ஊடகங்கள்ல செய்தி வந்ததும், ‘அரசு அறிவிச்ச விலையை விவசாயி களுக்குக் கொடுத்துதான் கொள்முதல் செய்யணும்’னு அரசு அறிவிச்சது. ஆனாலும், எந்த விவசாயிக்கும் 33 ரூபாய் விலை கிடைக்கல. ஒரு வருஷம் வம்பாடுபட்டுக் கரும்பை விளைய வெச்ச விவசாயிக்கு 13 ரூபாய்… விவசாயிகிட்ட வாங்கி, அரசாங்கத் துக்குக் கைமாத்தி விட்ட இடைத்தரகர்களுக்கு 20 ரூபாய். அப்புறம் எப்படி விவசாயி வாழ்க்கையில விடியல் வரும்’ என்றார் வேதனையுடன்.
`ஸ்டாலின் வர்றாரு… விடியல் தரப்போறாரு’ன்னு சந்துபொந்தெல்லாம் கதற விட்டாங்க… அவங்க வந்த பிறகுதான் இருட்டாவே ஆனது . கண்டிப்பா விடியல் வருமானு தெரியாது. அது வரும்போது வரட்டும். நாம பொழப்பை பார்க்கலாம்