பிரதமர் நரேந்திர மோடியி பஞ்சாப் மாநிலத்தில் பலவேறு நலத்திட்டங்களை தொண்டங்குவதற்காக பஞ்சாப் சென்றிருந்தார். அந்த பயணத்தின்போது பஞ்சாப் மாநிலம் காவல்துறை மாநில அரசுகளின் கவன குறைபாட்டால் பிரதமர் செல்லும் பாதையின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி ஏற்பட்டது. இதனால் நாடு முழுவதும் பஞ்சாப் காங்கிரஸ் அரசின் மீது பல குற்றசாட்டுகள் வைக்கப்ட்டது. இதனை தொடர்ந்து . உள்துறை அமைச்சர் அமித் ஷா முக்கிய முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலும் உயர் மட்ட பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு கொடுக்கப்படும் சிறப்பு பாதுகாப்புப் படை சட்டத்தில் திருத்தம் செய்ய, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முடிவு செய்துள்ளார்.எதிர்காலத்தில் ஏற்படும்இதுபோன்ற பாதுகாப்பு குளறுபடிகளுக்கு மாநில டி.ஜி.பி.,க்களை பொறுப்பேற்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பஞ்சாபில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்., அரசு அமைந்துள்ளது.உத்தர பிரதேசம், பஞ்சாப் உட்பட ஐந்து மாநில சட்டசபைகளுக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது.பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சமீபத்தில் பஞ்சாபுக்கு பயணம் செய்தார். பிரதமர் பயணித்த பாதையில், சிலர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் நடுவழியில் 20 நிமிடங்கள் வரை காத்திருந்த மோடி பயணத்தை ரத்து செய்து டில்லி திரும்பினார்.இந்த விவகாரம் நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பிரதமர் மோடி விளக்கினார்.பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி கள் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்த விவகாரத்தை பா.ஜ.க மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தீவிரமாக எடுத்து கொண்டுள்ளார்.
‘ஒரு வேளை இது கொலை முயற்சியாக இருக்குமா’ என்ற சந்தேகமும், மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதிகள் சதி இருக்குமா என்றும் மத்திய அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.பா.ஜ.க தலைவர்கள் இந்த விவகாரத்தை மிகவும் முக்கியமாக பார்க்கின்றனர். பஞ்சாப் முதல்வரின் நடத்தையும் விசாரணை வளையத்தில் வந்துள்ளது.பிரதமரின் பாதுகாப்பை எஸ்.பி.ஜி., எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படை கவனித்து வருகிறது.
காங்கிரஸ் ஆட்சியில் 1985ல் இந்த எஸ்.பி.ஜி., தொடர்பாக சட்டம் உருவாக்கப்பட்டது.பிரதமரின் பாதுகாப்பில் ஏதாவது குளறுபடி ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு என்பதற்கு இந்த சட்டத்தில் சரியான விளக்கம் இல்லை. காங்கிரசை கைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை செய்யப்பட்ட பின் இது தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி வர்மா கமிஷன் இதைச் சுட்டிக் காட்டியுள்ளது.
பஞ்சாப் குளறுபடிக்குப் பின் இந்த சட்டத்தில் சில முக்கிய மாற்றங்களை செய்ய அமித் ஷா முடிவெடுத்துள்ளார்.சட்டத்தில் திருத்தம்’பிரதமர் எந்த மாநிலத்திற்கு சென்றாலும், சம்பந்தப்பட்ட மாநில தலைமைச் செயலர் மற்றும் டி.ஜி.பி., தான் அவரது பாதுகாப்பிற்கு பொறுப்பேற்க வேண்டும்.’ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அவர்கள் பதவி பறிபோவதுடன் சிறைக்கும் செல்ல வேண்டியிருக்கும்’ என, இந்த சட்டத்தில் திருத்தம் செய்ய, உள்துறை அமைச்சகம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
சோனியா கவலை
பஞ்சாப் மாநில காங்கிரசில் ஏற்கனவே உட்கட்சி பிரச்னை தீவிரமாக உள்ளது. அமரீந்தர் சிங் கட்சியில் இருந்து வெளியேறியதில் இருந்து பஞ்சாபில் காங்கிரஸ் கலகலத்து போயுள்ளது. இந்நிலையில் பஞ்சாபுக்கு வந்த பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடியும் அந்த கட்சிக்கு பெரும் சோதனையை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் விரைவில் நடக்கஉள்ள பஞ்சாப் சட்டசபை தேர்தலில் கட்சியின் வெற்றி பாதிக்கப்படுமோ என சோனியா கவலை அடைந்துள்ளார். இந்த விஷயத்தில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் பொறுப்பற்ற பதில், சோனியாவை மேலும் கோபப்படுத்தியுள்ளது.சரண்ஜித்தை போனில் அழைத்து கடுமையாக திட்டியுள்ளார் சோனியா. இதையடுத்து தான், பத்திரிகையாளர்களை அழைத்து, பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி குறித்து விளக்கம் அளித்துள்ளார், சரண்ஜித்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















