தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே இந்துமதத் துறவி ராமானுஜருக்கு, 216 அடி உயரத்தில் பிரமாண்டமான சிலை ரூ.1000 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்துத் துறவியான ராமானுஜர் என்கிற ராமானுஜ சாரியா, தமிழகத்தில் பிறந்தவர். கருணைக்கடல் என்று அழைக்கப்படும் இவர், உலகமெங்கும் சமத்துவம் பரவ பாடுபட்டவர்.
இவருக்கு, ஐதராபாத் அருகே ஷாம்ஷாபாத் விமான நிலையம் அருகே 216 அடி உயரத்தில் மிகவும் பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டு வருகிறது. தன்னார்வலர்களின் நிதியுதவியுடன் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், வெண்கலத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு துவங்கிய இந்தப் பணிகள், தற்போது 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. உலகிலேயே இரண்டாவது பெரிய சிலையாக இது கருதப்படுகிறது. தாய்லாந்தில் 302 அடி உயரமுள்ள புத்தர் சிலையே, உலகிலேயே மிகப்பெரிய சிலையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
ராமானுஜ சாரியாவின் சிற்பம், மெல்கோட் மற்றும் ஸ்ரீரங்கம் கோவில்களில் உள்ள ராமானுஜரின் செதுக்கப்பட்ட கல் உருவங்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நிர்வாக குழுவில் உள்ள தேவானந்த ராமானுஜா ஜீயர் தெரிவித்தார்.
11-ஆம் நூற்றாண்டில் தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்தவரும், வைஷ்ணவ குருமாருமான ராமானுஜரின் 216 அடி உயர சிலையை பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 5-ஆம் தேதியன்று திறந்து வைக்கிறது. இந்த சிலை ஹைதராபாத் நகரில் அமைந்துள்ளது. ஷம்ஷாபாத் பகுதியில் சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் இந்த சிலை அமைந்துள்ளது. சமத்துவத்துக்கான சிலை (Statue of Equality) என இந்த சிலை போற்றப்படுகிறது.
இதனை நிர்வாக குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தங்கம், வெள்ளி, தாமிரம், பித்தளை மற்றும் துத்தநாகம் என ஐந்து விதமான உலோகங்களை பயன்படுத்தி இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தவர் ராமானுஜர்.
இந்த சிலையை நிறுவுவதற்கான அடிக்கல் கடந்த 2014-இல் நாட்டப்பட்டது. மெல்கோட் மற்றும் ஸ்ரீரங்கம் கோயில்களில் உள்ள ராமானுஜரின் செதுக்கப்பட்ட கல் உருவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.