மத்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து வருவாய் இழப்பில் இயங்கி வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே அந்நிறுவனத்தை விற்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஏர் இந்தியாவை விற்பனை செய்யும் முயற்சியை மத்திய அரசு தீவிரப்படுத்தியது. இதில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்க டாடா குழுமம் விருப்பம் தெரிவித்து. அது தொடர்பான ஏலத்தில் வென்ற டாடா நிறுவனத்திற்கு ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க மத்திய அரசு ஒப்புக் கொண்டதை அடுத்து, 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு டாடா குழுமத்தின் டாலசி பிரைவெட் லிமிட்டெட் என்ற நிறுவனம் வாங்கியது.
இந்நிலையில், இன்று ஏர் இந்தியா நிறுவனம் முழுமையாக, முறையாக டாடா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஏர் இந்தியாவை முழுமையாகன் ஒப்படைத்த நிலையில், டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன், ஏர் இந்தியா மீண்டும் எங்கள் வசம் வந்து சேர்த்ததில் நிறுவனம் “மகிழ்ச்சியாக” இருப்பதாகக் கூறினார். மேலும், நிறுவனம் “உலகத் தரம் வாய்ந்த விமான சேவையை” தரும் வகையில் பணியாற்ற ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்றார்.
“ஏர் இந்தியா நிறுவனத்தை ஒப்படைக்கும் செயல்முறை நிறைவடைந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் & ஏர் இந்தியாவை மீண்டும் டாடா குழுமத்தில் இணைந்துள்ள நிலையில், உலகத்தரம் வாய்ந்த விமான சேவையை அளிக்க அனைவருடனும் இணைந்து பணியாற்ற வேண்டுமென நாங்கள் எதிர்நோக்குகிறோம்,” என்று அவர் கூறியதாக செய்தி நிறுவனமான ANI தெரிவித்துள்ளது.
புகழ்பெற்ற தொழிலதிபரும் இந்தியாவின் முதல் வணிக உரிமம் பெற்ற விமானியுமான ஜெஹாங்கிர் ரத்தன்ஜி தாதபோய் டாடா விமான நிறுவனத்தை துவங்கினார். டாடா குழுமம்-ஏர் இந்தியா உறவு 1932ம் ஆண்டில் உருவானது. தனது பயணிகள் விமான சேவைகளை 1938ம் ஆண்டில் வெளிநாடுகளுக்கும் விரிவாக்கியது டாடா நிறுவனம்.
டாடாவால் தோற்றுவிக்கப்பட்ட விமான நிறுவனம் நிறுவனங்களின் பெயர் டாடா ஏர் டாடா ஏர்லைன்ஸ் என மாற்றப்பட்டது. புகழ்பெற்ற விமான நிறுவனமானது, பர்மாவில் இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டிஷ் ராயல் விமானப்படைக்கு ஆதரவாக செயல்பட்டது.
போர் முடிந்தவுடன், விமான நிறுவனம், தனது பெயரை மாற்றியது. அப்போது வைக்கப்பட்டது தான் ‘ஏர் இந்தியா’ மத்திய அரசு விரைவில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை வாங்கியது. 1953 ஆம் ஆண்டில் விமான நிறுவன சட்டத்தின் மூலம், டாடா சன்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்திய அரசாங்கம், அதனை நாட்டுடமையாக்கியது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















