‘பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஜாகீர் உசேன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும்,” என பா.ஜ., கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் நேற்று அவர் அளித்த பேட்டி: கரூர் பரத நாட்டிய பள்ளி ஆசிரியை ஒருவர், ஒரு மாதத்துக்கு முன், பரதநாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். ஒரு மாதமாக, அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இன்னும் 24 மணி நேரத்திற்குள் ஜாகீர் உசேன் மீது நடவடிக்கை எடுக்கா விட்டால், மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும்.’தமிழகத்தில் சொத்து வரியை உயர்த்த வேண்டும்’ என மத்திய அரசு கூறவில்லை. இது குறித்து, அமைச்சர் நேரு பச்சைப் பொய் கூறுகிறார்.
‘நீட்’ தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசு, வரியை உயர்த்த வேண்டும் என்ற அறிவிப்புக்கு எதிராக, ஏன் தீர்மானம் போடவில்லை. தமிழக முதல்வர், துபாய்க்கு குடும்ப சுற்றுலா சென்று வந்துள்ளார்.இவ்வாறு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார்.