மோடியும் அம்பேத்கரும் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள புத்தகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் மோடியையும் அம்பேதகரையும் ஒப்பிட்டு கருத்து தெரிவித்திருந்தார். இது திராவிட கட்சிகளுக்கு எரிச்சலை ஊட்டியது, மேலும் விசிகவினர் இளையராஜா அவர்களை ஒருமையில் பேசினார்கள்.காங்கிரஸ் கட்சியின் இளங்கோவனோ இளையராஜாவை சாதி ரீதியாக பேசினார்.
இந்த நிலையில் , பாஜக தலைவர் அண்ணாமலை, அம்பேத்கர் செய்ததையும் பிரதமர் மோடி செய்ததையும் ஆதாரப்பூர்வமாக எடுத்து வைத்து விவாதிக்க நான் தயார் என அண்ணன் திருமாவளவனை அழைக்கிறேன். அவர் சொல்லும் இடத்தில் அவர் சொல்லும் நேரத்தில் விவாதிக்கலாம் என்று கூறினார். ஆனால் திருமாவளவன் சப்பை கட்டு கட்டி இதற்கு பதில் அளிக்கவில்லை. இதுகுறித்து செய்தியாளர்களிடம் , விவாதிப்பது குறித்து திருமாவளவனிடம் இருந்து பதில் வரவில்லை என்று விமர்சித்திருந்தார். பாஜக தலைவர் அண்ணாமலை இதற்கு பதில் அளித்த விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு, இந்துமதத்தின்புதிர்கள் நூலை தங்களிடம் கொடுத்து அதில் 10 பக்கம் மட்டும் படித்து காட்ட விரும்புகிறோம்.
நாளை கமலாலயத்தில் இருந்தால் நேரம் கொடுக்க இயலுமா? என பாஜக தலைவர் அண்ணாமலையை டேக் செய்து ட்விட்டரில் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் வன்னி அரசுவின் கேள்விக்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘அண்ணன் தொல் திருமாவளவன் அவர்களுடைய இடதுகை வலதுகை அனைவரும் நம்முடைய அலுவலகத்துக்கு வந்து அவர்கள் விரும்பும் புத்தகங்களை 26ம் தேதி மதியம் 12 மணிக்கு கொடுக்கலாம். நம் அலுவலகத்தில் தயாராக இருக்கக்கூடிய புத்தகங்களையும் வாங்கி செல்லலாம்.
அதன் பின்பு அண்ணன் தொல்.திருமாவளவனிடம் நேரத்தையும், தேதியும் அவர்கள் கூட்டாக அமர்ந்து முடிவு செய்து சொல்லட்டும், தயாராக சொல்லும் இடத்திற்கு வருகின்றேன். அனைத்து விடுதலை சிறுத்தை கட்சியின் சகோதர சகோதரிகளை நமது கமலாலயத்திற்கு 26 ஆம் தேதி வரவேற்கின்றேன், உங்களிடம் புத்தகம் இருந்தால் கொடுப்பதற்கு!
தலைப்பு: அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய சித்தாந்தத்தை முழுமையாக பின்பற்ற கூடிய தலைவர் பாரத பிரதமர் மோடி அவர்கள்!’ என்று பதில் அளித்துள்ளார்