வேல்முருகன் தொடர்ந்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்ததாகவும், தன்னை காப்பாற்றிக் கொள்ளவே பா.ஜ.கவில் இணைந்ததாகவும் காயத்ரி தெரிவித்துள்ளார்.
வேல்முருகன், காயத்ரியை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே விவாகரத்து செய்த நிலையில், காயத்ரி தற்போது பா.ஜ.கவில் இணைந்துள்ளதும், வேல்முருகன் மீது குற்றம்சாட்டியுள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேல்முருகன் ராமதாஸின் கட்சியான பா.ம.க.விலிருந்து அதிருப்தியில் விலகிய வேல்முருகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியை தொடங்கினார். அதன் மூலம் மத்திய மாவட்டங்களில் பா.ம.க.வின் மீது அதிருப்தியில் இருந்த கணிசமான ஆதரவாளர்களையும் பெற்றார். தமிழக வாழ்வுரிமை கட்சி தற்போது தமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. த.வா.க தலைவர் வேல்முருகன் தி.மு.க கூட்டணி சார்பில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு வென்று தற்போது எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார்.
பாஜகவில் முன்னாள் மனைவி கடந்த 2018ஆம் ஆண்டு த.வா.க தலைவர் வேல்முருகன் மற்றும் அவரது மனைவி காயத்ரிக்கும் இடையே விவாகரத்து ஏற்பட்டது. இந்நிலையில், காயத்ரி தற்போது பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனின் முன்னாள் மனைவில் காயத்ரி பா.ஜ.கவில் இணைந்துள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காயத்ரி குற்றச்சாட்டு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனால் எனக்கு வெளியில் சொல்ல முடியாத துன்பங்கள் ஏற்பட்டன. அவரிடம் இருந்து விவகாரத்து பெற சட்டப்படி முயற்சி மேற்கொள்ளப்பட்டு அவரிடம் இருந்து பிரிந்துவிட்டேன். இப்போது தனியாக வசித்து வரும் என்னை பழிவாங்கும் நோக்கத்தில், தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்தார் வேல்முருகன் எனக் குற்றம்சாட்டியுள்ளார் காயத்ரி.
பாஜகவில் இணைந்தேன் தற்போது வேல்முருகன் தி.மு.க கூட்டணியில் எம்.எல்.ஏவாக இருப்பதால் அவருக்கு அதிக செல்வாக்கு உள்ளது. அவர் மீது புகார் கொடுத்தாலும் யாரும் எனக்கு உதவ முன்வரவில்லை. எனவே, என்னை காப்பாற்றிக் கொள்வதற்வாக பா.ஜ.கவினர் சிலர் மூலம் மாநிலத் தலைவர் அண்ணாமலையை சந்தித்துப் பேசி பா.ஜ.கவில் இணைந்துவிட்டேன். இனி என்னை பா.ஜ.கவினர் என்னைக் காப்பாற்றுவார்கள் என்று கூறியுள்ளார் காயத்ரி.