மத்திய அரசு அதிரடியாக பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைகுறைத்தது. அதன்படி, பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, மாநில அரசும் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டுமெனவும் திமுக அரசு தேர்தல் வாக்குறுதி அளித்தபடி பெட்ரோல் டீசல் விலையினை குறைக்கவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அரசுக்கு 72 மணிநேரம் கெடு வைத்தார் இல்லையெனில் கோட்டையை நோக்கி போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தார். அவர் சொன்னது கடந்த 31 ஆம் தேதி கோட்டையைதமிழக பா.ஜ.க சார்பில் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் 10,000 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டார்கள். இதை சற்றும்எதிர்பார்க்கவில்லை தமிழக அரசியல் கட்சிகள். தமிழக அரசியல் கட்சிகளுக்கு இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாஜகவின் செயல்பாடுகள் தீவிரமாகவும் வேகமாகவும் வளர்ந்து வருவது திமுகவிற்கு மட்டுமல்ல அதிமுகவிற்கு ஷாக் கொடுத்துள்ளது. இந்த நிலையில் போராட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை அண்ணாமலை தமிழக அரசைக் கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார். குறிப்பாக இந்த ஆட்சியே 750 நாட்கள்தான் இருக்கும் என்று கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து திருச்சியில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அண்ணாமலை திமுக அரசை கடுமையாகத் தாக்கிப் பேசினார். அப்போது பேசிய அவர், ” தமிழக அரசைக் கவிழ்க்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் தமிழக அரசின் செயல்பாடு மிக மோசமாக இருக்கிறது. இன்னும் சில தினங்களில் இரண்டு துறைகளில் நடைபெற்ற ஊழல் புகார்கள் தொடர்பான கோப்புக்களை வெளியிட உள்ளேன். என கூறியது திமுக தரப்பில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தான் மத்திய உளவுத்துறை பாஜக தலைவர் அண்ணாமலையிடம் ஒரு ஆடியோ டேப் ஒன்றை கொடுத்துள்ளது. இந்த ஆடியோ டேப் முன்னாள் திமுக மத்திய அமைச்சர் பேசிய ஆடியோ என கூறப்படுகிறது. இதில் வெளியுறவு கொள்கை பற்றி பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒருவேளை இந்த ஆடியோவில் தேசத்திற்கு எதிராக பேசிய ஆடியோவாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது, இது எந்த நேரத்திலும் வெளியிடப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கிறது.
திமுக ஆட்சியில் இரண்டு துறைகளில் நடைபெற்ற ஊழல் புகார்கள் தொடர்பான கோப்புக்கள் வெளியிடப்பட்டுமா அல்லது ஆடியோ முதலில் வெளியிடலாமா என பா.ஜ.க தரப்பு ஆலோசித்து வருகிறது. எது முதலில் வந்தாலும் திமுகவிற்கு மிகப்பெரிய அடியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மத்திய அரசினை மேலும் எதிர்க்கலாமா இல்லை அனுசரித்து கருணாநிதி வழியில் செல்லலாமா என திமுகவும் ஆலோசித்து வருகிறதாம்.