: பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான அப்பாஸ் பாய் குறித்து சில சுவராஸ்ய தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரதமர் மோடி தன் தாயார் ஹீராபாய் 100 வது பிறந்த நாளை கடந்த 18 ம் தேதி கொண்டாடினார். இதற்கென குஜராத் காந்திநகர் சென்று அம்மாவின் காலில் விழுந்து வணங்கியதுடன் அவரது பாதத்தை கழுவி கண்ணில் ஒத்தி கொண்டார்.
அம்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் ஒரு நீண்ட கடிதத்தில் அம்மாவின் பாசம் மற்றும் மறக்க முடியாத அசைவுகளை அவர் நினைவு கூர்ந்திருந்தார். ” மா ” என்ற தலைப்பில் தாய் பாசம் பல உணர்வுகளை அடக்கியது என்று குறிப்பிட்டிருந்தார்.
இதில் தனது அப்பாஸ் பாய் நண்பர் குறித்து எழுதுகையில் எனது நண்பருக்கு தாயார் பிடித்த உணவுகளை செய்து கொடுப்பார். தந்தை இறந்ததால் அப்பாஸ் எங்களுடன் வசித்தார் என்றும் கூறியுள்ளார்.
அப்பாஸ் பாய் தற்போது அவரது இளைய மகனுடன் சிட்னியில் வசித்து வருவதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















