சமூகநீதியை தொடர்ந்து நிலைநாட்டிவரும் கட்சியாக பாஜக திகழ்ந்து வருகிறது.அதற்கு சாட்சியாக பாரதிய ஜனதா ஆட்சியில் இருந்த மூன்று முறையும் இஸ்லாமியர், பட்டியலினத்தவர், பழங்குடியின பிரிவைச் சேர்ந்தவர்களை குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளர்களாக அறிவித்து சமூக நீதியை நிலைநாட்டியுள்ளது.
இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்துவரும் ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக் காலம் வரும் ஜூலை 25 அன்று நிறைவடைகிறது. அடுத்த குடியரசுத்தலைவருக்கான தேர்தல் ஜூலை 18 அன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு எதிர்கட்சிகளும் பாஜகவும் தயாராக தொடங்கினர். எதிர்க்கட்சிகள் குடியரசு தலைவர் வேட்பாளர் கிடைக்காமல் திக்கி திணறி ஒருவழியாக தங்களுடைய பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவை அறிவித்தது. இதனை தொடர்ந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டார். இவர் இதற்கு முன்பாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளுநராக இருந்தவர்.
பாரதிய ஜனதா கட்சி 2002 – முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த தமிழரான திரு.அப்துல் கலாமை குடியரசுத் தலைவர் ஆக்கியது. 2017 – பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பட்டியலினத்தைச் சேர்ந்த திரு.ராம்நாத் கோவிந்த் அவர்களை குடியரசுத் தலைவர் ஆக்கியது. 2021ல் – பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பழங்குடியினத்தை சேர்ந்த திருமதி .திரௌபதி முர்மு அவர்களை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்துள்ளது பா.ஜ.க
திரெளபதி முர்மு வெற்றி பெற்றால், நாட்டில் குடியரசுத் தலைவரான முதல் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்ற பெருமை திரெளபதி முர்முவுக்குக் கிடைக்கும். மேலும் ஆட்சியில் இருந்த மூன்று முறையும் இஸ்லாமியர், பட்டியலினத்தவர், பழங்குடியினரை குடியரசுத் தலைவராக்கிய பெருமை பா.ஜ.கவுக்கும் கிடைக்கும்.
மேலும் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை வேட்பாளராக தேர்வு செய்ததற்காக, எதிர்க்கட்சிகள் கூட்டணியில் உள்ள கட்சிகளும் வரவேற்பும், ஆதரவும் தெரிவித்துள்ளன ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம், காங்கிரசுடன் கூட்டணி வைத்திருக்கும் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள், திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. எனவே பழங்குடியினரை குடியரசுத் தலைவராக்கிய பெருமை பா.ஜ.கவுக்கும் கிடைக்கும். என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.