இந்தியாவில் மத மோதல்களை தூண்டும் விதமாக செயல்பட்டு வந்த ஆல்ட் நியூஸ் இணையதளத்தின் இணை நிறுவனர் முகமது ஜுபைர்.இன்று டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இவர் பல வழக்குகள் பதியப்பட்டிருக்கிறது. அதற்கு எல்லாம் முன் ஜாமின் வாங்கிக்கொண்டு மீண்டும் மத உணர்வுகளை தூண்டும் விதமாக பதிவுகளை பதிவு செய்து வந்தார் முகமது ஜுபைர் இந்நிலையில் 2020-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றுக்காக டெல்லி காவல் துறையினரால் விசாரணைக்கு நேற்று சென்றிருந்தார் என தகவல்கள் வெளியானது. இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்றிருந்தார் முகமது ஜுபைர். நேற்று இரவு முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டார். முன்ஜாமீன் பெற்ற வழக்கில் டெல்லி காவல்துறை எப்படி கைது செய்ய முடியும்? என ஊடகங்களில் போராளிகள் கொதிக்க தொடங்கினார்கள்.
2018-ம் ஆண்டு தனது ட்விட்டர் பக்கத்தில், பெயர் மாற்றப்பட்ட ஒரு மதத்தை கிண்டலடிக்கும் வகையில், `2014-க்கு முன்பு – ஹனிமூன் ஹோட்டல்; 2014-க்குப் பிறகு – ஹனுமன் ஹோட்டல்’ என்று பதிவிட்டிருந்தார் ஜுபைர். இந்தப் பதிவுடன் 1983-ல் வெளியான ஒரு இந்தி படத்தின் புகைப்படத்தையும் இணைத்திருந்தார். இந்த பதிவுக்கு இந்து கடவுள்களை கொச்சைப்படுத்தும் விதமாகவும் மத உணர்வுகளை தூண்டும் விதமாகவும் இருந்துள்ளது. இது தொடர்பாகக் கொடுக்கப்பட்ட வழக்கில்தான் முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டார்.
அதேபோல, 2020-ம் ஆண்டு இவரது பதிவுக்கு பதில் கூறிய ஹிந்து மதத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவருக்கு அளித்த பதிலில், மேற்கண்ட முதியவரின் படத்தோடு, அவரது பேத்தியின் போட்டோவையும் போட்டு, அவதூறாக குறிப்பிட்டிருந்தார்.
முகமது ஜுபைர் கைது குறித்து விளக்கம் அளித்த டெல்லி காவல்துறை, 2018-ம் ஆண்டு மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் ட்விட்டர் பதிவுகளை முகமது ஜுபைர் வெளியிட்டிருந்தார். இது தொடர்பான புகாரின் அடிப்படையில் முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்தது. அத்துடன் முகமது ஜுபைர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை ஒருநாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது.