இந்தியாவை இஸ்லாமிய நாடாக்குவதே எங்களது நோக்கம் என்று பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.) அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான அகமது ஷெரீப் கூறியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியாவிலிருந்து பாகிஸ்தான், பங்களாதேஷ் என்று இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பிரித்து எடுத்துக் கொண்டாலும், இந்தியாவையும் இஸ்லாமிய நாடாக்கி விட வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டே செயல்பட்டு வருகிறார்கள். இதற்காகவே சத்ய சாரணி என்கிற அறக்கட்டளை துவக்கப்பட்டு பல்வேறு இஸ்லாமிய நாடுகளில் இருந்து நன்கொடை பெற்று பி.எஃப்.ஐ., எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை உருவாக்கி களத்தில் இறக்கி விட்டிருக்கிறார்கள். இந்த அமைப்பினருக்கு அல் கொய்தா, சிமி, அல் உம்மா, லஷ்கர் இ தொய்பா, ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதை சூஃபி முஸ்லீம்களும் உறுதிப்படுத்தி வருகின்றனர்.
ந்த பி.எஃப்.ஐ., எஸ்.டி.பி.ஐ. போன்ற அமைப்பினர்தான் இந்தியாவில் கலவரம், வன்முறை, அரசு எதிராக போராட்டம் உள்ளிட்ட விரும்பத்தகாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, சமீபகாலங்களில் டெல்லி, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடந்த ராமநவமி விழா, ஹனுமன் ஜெயந்தி விழா உள்ளிட்ட ஹிந்து விழாக்களில் கல்வீசி கலவரத்தில் ஈடுபட்டது இந்த அமைப்பினர்தான். அதேபோல, மத்திய அரசுக்கு எதிராக சி.ஏ.ஏ. போராட்டத்தை நடத்தி டெல்லியில் மிகப்பெரிய அளவிலான கலவரத்தில் ஈடுபட்டார்கள். கேரளாவில் கடந்த மாதம் நடந்த பி.எஃப்.ஐ. பேரணியில் கிறிஸ்தவர்களையும், ஹிந்துக்களையும் கொல்வோம் என்று கோஷமிட்டுச் சென்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதும் இவர்கள்தான். ஆகவே, பி.எஃப்.ஐ. உள்ளிட்ட இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளை தடை செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
இந்த நிலையில்தான், இந்தியாவை இஸ்லாமிய நாடாக்குவதுதான் எங்களின் நோக்கம் என்று பி.எஃப்.ஐ. நிறுவனர்களில் ஒருவரான அகமது ஷெரீப் கூறியிருக்கும் காணொளி வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து அகமது ஷெரீப்பிடம் ஒரு நிருபர் கேள்வி எழுப்பியதற்கு, “பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் சத்ய சாரணி ஆகியவற்றின் முக்கிய நோக்கமே இந்தியாவை இஸ்லாமிய நாடாக்குவதுதான். இதன் பிறகு, நாங்கள் உலக நாடுகள் அனைத்துக்கும் சென்று, அவற்றையும் இஸ்லாமிய நாடாக மாற்றுவோம்” என்று திமிராக பதிலளிக்கிறார். இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி ஹிந்துக்கள், ஹிந்து அமைப்புகள் மற்றும் கிறிஸ்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















