தமிழகம் வந்த பாரத பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா முடிந்த பின் கிண்டி ஆளுநர் மாளிகையில் பாஜக முக்கிய தலைவர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.
செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா முடிந்ததும் பிரதமர் மோடி ஆளுநர் மாளிகை சென்றார். அங்குதான் பிரதமர் மோடி ஓய்வு எடுத்தார். ஆனால் ஓய்வு எடுக்கும் முன்பிரதமர் மோடி பாஜக நிர்வாகிகளை சந்தித்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன்,பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன்,முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்னன் போன்றவர்களை பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை செய்தார்.
இந்த சந்திப்பில் பல்வேறு முக்கிய விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி தமிழ்நாட்டு அரசியல் நிலவரங்கள் குறித்து பிரதமர் மோடி கேட்டு இருக்கிறார். பாஜகவில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் தங்களை அறிமுகப்படுத்தி உள்ளனர். அவர்களை நன்றாக செயல்படும்படி பிரதமர் மோடி வாழ்த்தி இருக்கிறார். அதன்பின் அதிமுக விவகாரங்கள் குறித்து மோடி கேட்டதாக தெரிகிறது.
மோடியிடம் அதிமுக விவகாரங்கள் குறித்து பேச எடப்பாடி பழனிசாமி பல முறை முயன்றார். ஆனால் டெல்லியில் அவருக்கு பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன்பின் நேற்று சென்னை விமான நிலையத்தில் எடப்பாடியை மோடி சந்தித்தார். ஆனால் இவர்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. முன்னதாக நேற்று முதல்நாள் இரவு தம்பிதுரை பிரதமர் மோடியை சந்தித்து சில நிமிடங்கள் பேசினார்.
அதிமுக விவகாரங்கள் குறித்து தம்பிதுரை மோடியிடம் பேசியதாக கூறப்பட்டது. இந்த நிலையில்தான் நேற்று பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் மோடி அதிமுக விவகாரங்கள் குறித்து பேசி இருக்கிறார். அதிமுகவில் என்ன நடக்கிறது என்றும் விவாதித்து இருக்கிறார். அதன்பின் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியை எப்படி உருவாக்குவது. அதிமுக கூட்டணியில் தொடரலாமா? அதிமுக வலுவாக இருக்கிறதா என்றும் மோடி கேட்டதாக தெரிகிறது.
அதோடு பாஜக புதிய நிர்வாகிகள் தேர்தல் பணிகளை செய்ய ரெடியா? லோக்சபா தேர்தலுக்கு இப்போதில் இருந்தே பணிகளை செய்ய ரெடியா என்றும் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனையில் பாஜக – அதிமுக கூட்டணி பற்றி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றாலும்.. கூட்டணியில் தொடர்வதே பாஜகவிற்கு நல்லது என்று சில மூத்த நிர்வாகிகள் பேசியதாக கூறப்படுகிறது. மற்றபடி இந்த கூட்டணியில் பெரிய முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில், `வரும் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தமிழகத்திலிருந்து 24 எம்.பி-களாவது பெற வேண்டும். கூட்டணி பற்றி எல்லாம் கவலைப்படாதீர்கள். தீவிரமாக வேலை செய்ய வேண்டும்’ என்று பிரதமர் கூறியிருக்கிறார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















