காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஒன்றாக இருப்பது ராஜஸ்தான். இங்கு, முதல்வராக இருப்பவர் அசோக் கெலாட். தமிழகத்தில், பெண்களின் பாதுகாப்பு எந்த அளவிற்கு உள்ளது என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவர். அதைவிட பன்மடங்கு ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையிலேயே இருந்து வருகிறது. அதனை மெய்ப்பிக்கும் வகையில், ராஜஸ்தானில் துயர சம்பவம் ஒன்று அரங்கேறி இருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் நரேந்திர சைனி. இவர், இஸ்லாம் மதத்தை சேர்ந்த நக்மா கான் என்பவரை காதலித்து உள்ளார். இதையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளனர். ஆனால், பெண் வீட்டில் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து, சைனி தனது நண்பர்களின் துணையுடன் நக்மாவை திருணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து, மூன்று மாத கர்ப்பிணியான தனது மனைவியை வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக நரேந்திர சைனி மருத்துவமனைக்கு அழைத்து சென்று இருக்கிறார். அப்போது, நக்மா கானின் தந்தை தனது மகளை ஆட்டோ ஏற்றி கொல்ல முயற்சி செய்து இருக்கிறார். இச்சம்பவம், ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் நிகழ்ந்துள்ளது. உயிரை காப்பாற்றிக் கொள்ளும் விதமாக நக்மா கான் பரபரப்புடன் ஓடிய சம்பவம் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வியில் பதிவு ஆகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
source mediyan
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















