தமிழக சட்டப்பேரவையில் நேற்று 9ஆம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்கியது. இந்த நிலையில், ஆளுநர் உரையில் அச்சிடப்பட்ட சில பதிவுகளை ஆளுநர் தவிர்த்ததால், ஆளுநர் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேற்றைய தினம் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார்.
அப்போது, தமிழக ஆளுநர் R.N. ரவி, முதலமைச்சர் பேசிக்கொண்டிருந்த போது அங்கிருந்து சென்றார். இதனை பார்த்த கொண்டிருந்த திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான முனைவர் க.பொன்முடி அவர்கள் ஆளுநரை வெளியே செல் என்பது போல செய்கை காண்பித்ததிருந்தார்.
இந்த நிலையில், அந்த செயல் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்த நிலையில், விழுப்புரம் தெற்கு மாவட்ட பாரதி ஜனதா கட்சி தலைவர் வி.ஏ.டி..கலிவரதன் சமூக வலைதள பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதில் *” தமிழக கவர்னர் ஆர்.என். ரவி அவர்களை சட்டமன்றத்தில் உதாசீனப்படுத்திய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடியை கைது செய்ய வலியுறுத்தி, விழுப்புரம் தெற்கு மாவட்டம் சார்பாக விழுப்புரத்தில் பொன்முடி இல்லத்தின் முன்பு முற்றுகைப் போராட்டம் எனவும், 20.01.2023ம் தேதியன்று மாதா கோவில் அருகில் பாண்டி ரோட்டில், விழுப்புரம் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவு செய்துள்ளார்*
முகநூல் மற்றும் வாட்ஸாப்பில் அவர் பதிவு செய்த சம்பவம் தற்போது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.