Wednesday, February 4, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

ரூ.200 கோடி லஞ்சம் சி.பி.ஐ வலையில் மு.க ஸ்டாலின் ! அண்ணாமலையின் அதிரடி வியூகம்!

Oredesam by Oredesam
April 15, 2023
in அரசியல், செய்திகள், தமிழகம்
0
ரூ.200 கோடி லஞ்சம் சி.பி.ஐ வலையில் மு.க ஸ்டாலின் ! அண்ணாமலையின் அதிரடி வியூகம்!
FacebookTwitterWhatsappTelegram

ரூ.200 கோடி லஞ்சம் சி.பி.ஐ வலையில் மு.க ஸ்டாலின்! அண்ணாமலையின் அதிரடி வியூகம்!

தமிழ் புத்தாண்டு அன்று திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று கூறிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் நேற்றைய தினம் பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தி.மு.கவின் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை வெளியிட்டார். மேலும் முதல்வர் மு.க ஸ்டாலின் மீது லஞ்ச குற்றச்சாட்டையும் வைத்தார். இது தான் தற்போது தமிழகத்தின் ஹைலைட் செய்தியானது.

READ ALSO

பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

கடந்த 2006-11ல் திமுக ஆட்சியில் சென்னை மெட்ரோ ரயில் முதல் திட்டத்தின்போது ஷெல் கம்பெனிகளிடம் இருந்து மு.க.ஸ்டாலின் ரூ.200 கோடி லஞ்சம் வாங்கியதாககாவும் அதற்கான ஆதாரங்கள் இருக்கிறது இது தொடர்பாக நானே சி.பி.ஐக்கு புகார் அளிக்கப் போகிறேன் என அண்ணாமலை கூறியது திமுக வட்டாரங்களை கதிகலங்க செய்துள்ளது. மேலும் பல திமுகவின் முக்கிய தலைவர்கள் டெல்லியை முகாமிட்டுள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

மேலும் அண்ணாமலையை வைத்து தி.மு.க விற்கு நெருக்கடி அளிக்க தேசிய தலைமை முடிவெடுத்துள்ளது. திமுகவிற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே உள்ள பிசினஸ் டீலிங், 2ஜி முதல் கலைஞர் டிவி வரை வரை திமுக செய்த ஊழல்களை மீண்டும் மக்கள் முன் வைக்கவும், திமுகவின் மாவட்ட செயலாளர்கள் சொத்துக்கள் குறித்தும் அடுத்த வீடியோவில்வெளியிடப்படலாம் என பா.ஜ.க வட்டாரங்கள் கூறுகிறது. பாஜகவின் இதுபோன்ற அதிரடி வியூகங்கள் 2024 தேர்தலை முன் வைத்து நகர்த்தப்படுகிறது. இதற்கு தேசிய தலைமையின் வழிகாட்டுதல் படி காய்களை நகர்த்த உள்ளார் அண்ணாமலை.

மு.க ஸ்டாலின் லஞ்சம் குறித்து அண்ணாமலை கூறியதாவது: ,”2006 இல் இருந்து 2011ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்தபோது சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் அமைக்க அனுமதி கிடைக்கிறது. இந்த திட்டத்திற்கு ஜிகா நிறுவனம் 59 சதவீதமும், மத்திய அரசு 15 சதவீதமும், மாநில அரசு 21 சதவீதமும் நிதி உதவி அளித்தன. மொத்த திட்ட செலவு ரூ. 14 ஆயிரம் கோடி. தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பாக அவசர அவசரமாக இந்த டெண்டரைக் கொண்டு வருகிறார்கள். 5.5.2010ம் ஆண்டு மத்திய அரசு எக்சிஎம் பாலிசியை கொண்டு வருகிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் ஒரு டெண்டரில் கலந்து கொண்டால் அதை எப்படி மதிப்பீடு செய்ய வேண்டும் என்பது தொடர்பாக எக்சிஎம் பாலிசி கொண்டு வரப்படுகிறது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 14.5.2010 ம் தேதி, ஆதாவது ஒன்பதே நாளில் டெண்டர் வெளியிடுகிறது. இதில் 3 நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. டெண்டர் முடிய சில நாட்கள் இருக்கும் போது ஒரு திருத்தம் கொண்டு வருகிறார்கள். டெண்டரில் சுங்க வரியை சேர்க்கப் போகிறோம் என்று திருத்தம் கொண்டு வருகிறார்கள். அதற்குள் நிதி தொடர்பான கோரிக்கைகள் (financial bid ) சமர்ப்பிக்கப்பட்டு விட்டன.

ஆனால், எந்த காரணத்தைக் கொண்டும் சுங்க வரியை சேர்க்க கூடாது என்று எக்சிஎம் பாலிசி கூறுகிறது. சுங்க வரி சேர்ப்பதற்கு முன்பு ரூ.1417 கோடி கோரி இருந்த சீனாவைச் சேர்ந்த நிறுவனம் டெண்டருக்கு தகுதி பெற்று இருந்தது. இரண்டாது இடத்தில் ரூ.1434 கோடியுடன் ஆல்ஸ்டாம் நிறுவனம் உள்ளது. சுங்க வரி சேர்த்த உடன் இரண்டாவது இருந்த ஆல்ஸ்டாம் நிறுவனம் முதல் இடத்திற்கு வருகிறது. டெண்டர் முடிந்த பிறகு சுங்க வரியை திருப்பிக் கொடுத்து விட்டார்கள். ஆனால் டெண்டர் ஆல்ஸ்டாம் நிறுவனத்திற்கு அளிக்கப்படுகிறது.

உலக முழுவதும் பொருட்களை விற்பனை ஆல்ஸ்டாம் நிறுவனம் லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஆல்ஸ்டாம் நிறுவனத்திற்கு அமெரிக்காவில் 772 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் எங்களின் நேரடி குற்றச்சாட்டு முதல்வருக்கு 200 கோடி ரூபாய் ஆல்ஸ்டாம் நிறுவனத்தால் கொடுக்கப்பட்டுள்ளது. இது 2 நாடுகளைச் சேர்ந்த ஷெல் நிறுவனங்கள் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு தேர்தல் நிதிக்காக ரூ.200 கோடி மு.க.ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த துறை அப்போது மு.க.ஸ்டாலினிடம் இருந்தது. இது தொடர்பாக நானே சிபிஐக்கு புகார் அளிக்கப் போகிறேன். மத்திய அரசின் 15 சதவீத நிதி உள்ளதால் இந்த விசாரிக்க சிபிஐக்கு உரிமை உள்ளது.” இவ்வாறு அவர் கூறினார். இதன் காரணமாக திமுகவினர் சற்று நிலைகுலைந்து போயுள்ளதாகவும்
மேலும் பல திமுகவின் முக்கிய தலைவர்கள் டெல்லியை முகாமிட்டுள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

vanathi Srinivasan
அரசியல்

பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

February 4, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
“வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.
அரசியல்

“வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

February 3, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

மனம் நொந்து ராஜினாமா செய்த விஏஓ துரை பிரிதிவிராஜ்! அரசு பணியை விட சமூக பணியே பெரிது !

மனம் நொந்து ராஜினாமா செய்த விஏஓ துரை பிரிதிவிராஜ்! அரசு பணியை விட சமூக பணியே பெரிது !

May 2, 2023
சீனாவை காலி செய்வதற்கு நாங்கள் ரெடி !  அமெரிக்கா அதிரடி !

சீனாவை காலி செய்வதற்கு நாங்கள் ரெடி ! அமெரிக்கா அதிரடி !

June 27, 2020
குரு பெயர்ச்சி

குருப்பெயர்ச்சி 2024 : விருச்சிக ராசிக்காரர்களுக்கு பணம் பல வழியிலும் வந்து சேரும்! ஜோதிடர் திருக்கோவிலூர் பரணிதரன் 9444393717

April 30, 2024

இங்கிலாந்து – அயர்லாந்து அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி: இன்று ஆரம்பம்.

July 30, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x