ஏப்ரல் 20-ம் தேதி மு.க.ஸ்டாலின் மீது சி.பி.ஐயில் புகார்- அண்ணாமலையின் ஆட்டம் ஆரம்பம் !
ஏப்ரல் 14 ஆம் தேதி பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட வீடியோ தமிழகத்தில் பெரும் தாக்கத்தை உண்டாக்கி உள்ளது. தமிழகம் முழுவதும் பேசும் பொருளாகி விட்டதால் திமுக தரப்பிற்கு கலக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 200 கோடி லஞ்சம் பெற்றது தொடர்பாக சிபிஐயில் புகாரளிப்பேன் என கூறி இருந்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
இந்த நிலையில் கர்நாடக தேர்தல் பணிக்காக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நேற்று பெங்களூரு சென்றார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சென்னை மெட்ரோ ரயில் திட்ட பணிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் லஞ்சம் பெற்றது தொடர்பான கூடுதல் ஆதாரங்களுடன் 20-ம் தேதி டெல்லி சென்று சிபிஐயில் புகார் அளிக்க இருக்கிறேன். என் மீது திமுகவினர் வழக்கு தொடர்ந்தால் தொடரட்டும். நீதிமன்றமும், மக்கள் மன்றமும் இருக்கிறது. அதனால் எனக்கு பயம் இல்லை.
நான் கூறியிருக்கும் எந்த குற்றச்சாட்டையும் திமுகவினர் மறுக்கவில்லை. நான் வைத்த குற்றச்சாட்டு அனைத்தும் ஆதாரத்துடன் முன்வைக்கப்பட்டது. ஊழலுக்கு எதிரான எனது போராட்டம் தொடரும். இன்னும் பல ஆதாரங்களை நான் வெளியிடுவேன். நீதிமன்றத்தில் இன்னும் அதிகப்படியான ஆதாரங்களை அளிக்கத்தான் போகிறோம்.
‘என் மண் என் மக்கள்…’ இணையதளம் தொடங்கி 24 மணி நேரத்தில் ஊழலுக்கு எதிராக கட்சி சாராத 31 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இன்னும் 3 நாட்களில் ஒரு லட்சம் பேர் பதிவு செய்துவிடுவார்கள்.
புதிய கல்விக் கொள்கையின் சாராம்சம், பிராந்தியமொழிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகும். எனவே, சிஏபிஎஃப் தேர்வை தமிழில் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கும் என எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து இதுதொடர்பாக கோரிக்கை வைத்திருந்தேன். நாங்கள் தொலைபேசி வாயிலாக பேசினாலே மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள்.
திமுகவைப் பொறுத்தவரை அனைத்தையுமே ஆர்ப்பாட் டம், போராட்டமாகத்தான் பார்க்கிறார்கள்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எடுத்திருக்கிற முடிவு என்பது, மத்திய அரசு பிராந்திய மொழிகள் பக்கம்தான் இருக்கிறது என்பதை ஊர்ஜிதப்படுத்துகிறது. இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.