ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் வரும், 30ம் தேதி நடைபெற உள்ளது. இப்போட்டியை தென்மாவட்ட மக்களும் நேரில் கண்டு ரசிக்கும் வகையில், ‘விசில் போடு எக்ஸ்பிரஸ்’ ரயில் பயண திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், திருச்சியை சேர்ந்தவர்கள், விசில் போடு போட்டியில் பங்கேற்கலாம். இப்போட்டி, திருச்சியில் இன்று; மதுரை, திருநெல்வேலியில் நாளை நடைபெற உள்ளது.
இதில், 750 பேர் தேர்வு செய்யப்பட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையிலான போட்டியை காண்பதற்கான, இலவச சுற்றுப்பயணத்தில் பங்கேற்பர்.இதற்கான ரயில் கன்னியாகுமரியில், 29ம் தேதி மாலை புறப்படும். பயண செலவு, தங்கும் செலவு, உணவு செலவு ஆகியவை சி.எஸ்.கே., நிர்வாகம் ஏற்கும். போட்டி முடிந்தப்பின், 30ம் தேதி இரவு சென்னையில் இருந்து ரயில் புறப்படும்.
விசில் போடு எக்ஸ்பிரசில் பங்கேற்க, 18 வயதுக்கு மேற்பட்ட ரசிகர்கள், https://www.chennaisuperkings.com/whistlepoduexpress/#/ என்ற வலை தளத்தில் பதிவு செய்துக் கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.