கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் திருவில்வமலை பட்டிப்பரம்ப குன்னத்து வீட்டை சேர்ந்தவர் அசோக்குமார் பஞ்சாயத்து உறுப்பினராக உள்ளார். இவரது மகள் ஆதித்யஸ்ரீ ( வயது 8) ஆதித்யஸ்ரீ திருவில்வமலை கிறிஸ்ட் நியூ லைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
ஆதித்யஸ்ரீ நேற்று இரவு செல்போனில் வீடியோ பார்ர்த்துக்கொண்டிருந்தார். அப்போது செல்போன் எதிர்பாராதவிதமாக வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இதில் சிறுமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மோசமான பேட்டரி காரணமாக செல்போன் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இது குறித்து பாசயனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















