திமுக எம்.பி கனிமொழிக்கு, தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் மன்னிப்பு கேட்க முடியாது எனக் கூறப்பட்டுள்ளது.
அவதுாறு வீடியோ வெளியிட்டதற்காக, ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு, தி.மு.க., – எம்.பி., கனிமொழி சார்பில், அண்ணாமலைக்கு, வக்கீல் ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டது. வழக்கறிஞர் மனுராஜ் அனுப்பியுள்ள நோட்டீசில் கூறியிருப்பதாவது: தமிழக பா.ஜ., தலைவராகிய நீங்கள், ஏப்., 14ம் தேதி, ‘தி.மு.க., பைல்ஸ்’ என்ற பெயரில், ஒரு அவதுாறு வீடியோவை வெளியிட்டுள்ளீர்கள். உங்கள் மீது சிவில் மற்றும் குற்றவியல் வழக்கு தொடர, முகாந்திரம் உள்ளது.
கனிமொழிக்கு தனிப்பட்ட முறையிலும், பொது வாழ்வில் அவர் வைத்திருந்த மதிப்புக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. என் கட்சிக்காரர் அளவிட முடியாத மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்கு 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். கனிமொழியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். தவறினால், உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்நிலையில், திமுக எம்.பி கனிமொழிக்கு, தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கனிமொழியின் சொத்து விவரங்களை வெளியிட்ட விவகாரத்தில் மன்னிப்பு கேட்க மாட்டேன் எனவும், சட்ட நடவடிக்கையினால் அண்ணாமலை குரலை ஒருபோதும் ஒடுக்க முடியாது எனவும் நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















