மணப்பாறை சிறுமியை பெங்களூரு கடத்தி சென்றுபலாத்காரம் செய்த 3 பேரை காவல்துறை கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 16 வயுது சிறுமி வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் வேலைக்கு செல்வதாக கூறி சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பவில்லை.இதனை தொடர்ந்து அச்சிறுமியின் தாய் காவல்நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில்மணப்பாறை காவல்துறை வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சிறுமியை தேடி. வந்தனர்.
இந்தநிலையில் சிறுமியின் செல்போன் மூலம்அவர் பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது. இதனையத்து பெங்களூரு விரைந்துசென்ற மணப்பாறை காவல்துறை காணாமல் போன சிறுமியை மீட்டனர்.பின் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பெங்களூரு கடத்தி சென்றுள்ளது தெரியவந்தது. பெங்களூரு சென்ற அந்த நபர் பின்னர்அங்கு வைத்து, அவரும் மற்றும் 2 பேரும் சேர்ந்து அந்த சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.மேலும் அச்சிறுமியை மதம்மாற சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார்கள்.
பாலாத்காரம் செய்த வேலூரை சேர்ந்த 3 பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள் மேலும் அவர்களிடம். திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் மேற்பார்வையில் கூடுதல் போலீஸ்துணை சூப்பிரண்டு.குத்தாலிங்கம், மணப்பாறை போலீஸ்துணை சூப்பிரண்டு ராமநாதன் தலைமையிலான போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் தற்போது வெளிவந்துள்ள கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் உள்ள காட்டு போல்உள்ளதாக தெரிறது. இதனால் இந்த சம்பவம் மணப் பாறையில் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















