*விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பெண்ணைவலம் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த 24 ஆம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன், வைகாசி பெருவிழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, நேற்றைய தினம் சுவாமிக்கு திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில், இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில், திரளானப் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர்.
அப்போது, பக்தர்கள் தங்கள் நிலத்தில் விளைந்த தானியங்களையும், ரூபாய் நாணயங்களையும் சுவாமிக்கு சூறையாடி, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, இன்று அழுகளம் நிகழ்ச்சியும், தீமிதி திருவிழாவும் நடைபெறுகிறது. நாளைய தினம் மஞ்சள் நீராட்டுடன் இந்த வைகாசி பெருவிழா நிறைவடைகிறது.இந்தத் தேர்த் திருவிழாவைக் காண, பெண்ணைவலம் மட்டுமின்றி, அதன் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.














