சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இன்று 5வது நாள் யாத்திரையை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டார். அப்போது, அவர் மானாமதுரை மண்பாண்ட தொழில் கூடத்தில் மண்பாண்டங்களை செய்து பார்த்தார்.
“என் மண், என் மக்கள்” நடை பயணத்தின் நான்காம் நாளான நேற்று(ஜூலை 31) தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ஆர்.எஸ்.மங்கலம் நகர் பகுதியில் 2.5 கி.மீ., நடந்து சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்நிலையில், 5வது நாளான இன்று(ஆகஸ்ட் 01) சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மேற்கொண்டார். மண்பாண்ட கூட்டுறவு சொசைட்டியில் தொழிலாளர்களின் குறைகளை அண்ணாமலை கேட்டறிந்தார்.
இதையடுத்து, அவர் மானாமதுரையில் புகழ்பெற்ற கடம் இசைக்கருவியை இசைத்துப் பார்த்தார். அதேபோல் மண்பாண்ட தொழில் கூடத்தில், அண்ணாமலை மண்பாண்டங்களை செய்து பார்த்தார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















