அருந்ததியர் சமுதாய மக்கள் மலம் அள்ளும் சிறுபான்மை சமூகம்! ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு!
திமுகவின் சர்ச்சை பேச்சுக்கு உரித்தானவர் ஆ.ராசா சமூக நீதி என்ற பெயரில் எப்போதும் இந்து மதத்தினை பற்றி சர்ச்சை பேச்சுக்களை பேசிவருபவர் தான் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி இந்த நிலையில் திருச்சியில் கடந்த வாரம் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர் பயிற்சி பாசறை நடைபெற்றது இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய ஆ.ராசா,அருந்ததியர் சமுதாய மக்களை மலம் அள்ளும் சிறுபான்மை சமுதாயம் என்றும், ‘அவர்கள் ஓட்டுப்போட்டு யாரும் ஜெயிக்கப் போவதில்லை என்றாலும், அவர்களுக்கும் கலைஞர் 3 சதவீத உள் ஒதுக்கீடு பெற்றுக்கொடுத்ததாகவும் பேசியிருந்தார்.
இதைச் சொல்லி விட்டு அவர்களை குறைத்து மதிப்பிடவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். இவரது பேச்சு அருந்ததியர் சமுதாய மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சமூகவலைதளத்தில் ஆ.ராசாவின் பேச்சுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் பேச்சு, அருந்ததியர் சமுதாய மக்களை, கடும் கொந்தளிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
அவரின் பேச்சுக்கு ராஜா மன்னிப்பு கேட்க வேண்டுமென்று கூறி, அவருக்கு எதிராக தமிழகம் முழுதும், போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
உள் ஒதுக்கீடு கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த, அருந்ததியர் மக்களின் சார்பில், அவினாசியில், வரும் 7ம் தேதி, ஆதித் தமிழர் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பு, ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. இதே போல, ஈரோட்டில் வடிவேல் ராமனின் சமூக நீதிக் கட்சியும், மதுரையில் புரட்சிப் புலிகள் என்ற அமைப்பும், ராஜாவைக் கண்டித்து போராட்டங்களை நடத்தவுள்ளன.
அருந்ததியர் சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
தமிழகத்தில் அருந்ததியர் சமுதாயத்துக்கு, 60 லட்சம் ஓட்டுக்கள் உள்ளன. இந்த சமுதாயத்தின் மீது, தனிப்பட்ட முறையில் அக்கறை கொண்டு தான், முன்னாள் முதல்வர் கருணாநிதி, நீதிபதி ஜனார்த்தனன் தலைமையில் கமிட்டி அமைத்து, அருந்ததியருக்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடு கொடுத்தார்.
ஆனால் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., ஆட்சியில், அருந்ததியர் சமுதாய மக்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றனர். துாய்மைப் பணியாளர் நல வாரியம் உள்ளிட்ட எந்த வாரியத்திலும், அரசு சார்பு அமைப்புகளிலும், அருந்ததியர் மக்களை நியமிக்க மறுக்கும் நிலை தொடர்கிறது.
வெட்கக்கேடு அதன் உச்சமாக இப்போது, எம்.பி ஆ.ராசா எங்கள் சமுதாயத்தை இழிவாகப் பேசியுள்ளார். இதை கேட்டு, தி.மு.க வில் இருக்கும் அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவர்கள் அமைதி காப்பது, மிகவும் வெட்கக்கேடு.
அவர்கள் கேட்காவிட்டா லும், அவர் மன்னிப்பு கேட்கும் வரை, அருந்ததியர் சமுதாய அமைப்பினர் அனைவரும் இணைந்து போராடுவோம். அவரை மன்னிப்பு கேட்கச் சொல்ல வேண்டியது, முதல்வரின் முக்கியப் பொறுப்பு. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.