அமைச்சரின் பேச்சை புறக்கணித்து மட்டன் பிரியாணியை அரவணைத்த தி.மு.க தொண்டர்கள்!?
பிரியாணி முக்கியம் அமைச்சரே!
வரும் பாராளுமன்ற தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது பாஜக தலைவர் தனது நடைப்பயணத்தை தொடங்கி உள்ளார் மதுரையில் அதிமுக பிரமாண்ட பொதுக்கூட்டம் மற்றும் தீவிர உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளது. தி.மு.க தனது நிர்வாகிகள் கூட்டம் போட்டு வருகிறது.
இந்த நிலையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் பாராளுமன்ற தேர்தல் ஆலோசிக்க பூத் ஏஜென்ட் கூட்டம் நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திமுக பூத் ஏஜெண்ட் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பத்திரபதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமை வகித்தார்.
வருவாய் துறை அமைச்சர் பி.மூர்த்தி கட்சி நிர்வாகிகளிடம் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தல் பணிகளை எப்படி மேற்கொள்வது என மேடையில் அமைச்சர் பி.மூர்த்தி பேச ஆரம்பித்தவுடனே பிரியாணி ரெடியாகி விட்டது என செய்திகள் காத்து வாக்கில் பரவ தொடங்கியது. திமுக பூத் ஏஜென்ட் நிர்வாகிகள் அமைச்சர் மூர்த்தியின் பேச்சை கேட்காமல் கீழ்தளத்தில் பிரியாணிக்காக எழுந்து ஒடிய தொண்டர்களால் பரபரப்பானது.
இதில் உச்சகட்டமாக ஒருவரை ஒருவர் போட்டி போட்டு கொண்டு பிரியாணிக்காக ஒடிய தொண்டர்கள் மட்டன் பிரியாணியை ஒரு பிடித்தவாறே, அமைச்சர் பேச்சு முக்கியமில்லை பிரியாணி தான் முக்கியம் என்று அடித்து ஒடிய சம்பவம் திமுகவினரிடையே பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















