மத்திய அரசின் அடுத்த அதிரடி டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட குடியுரிமை பணியாளர் நியமனஅதிகாரத்தை அவசர சட்டத்தின் மூலமாக அகற்றிய மத்தி ய அரசு அடுத்து ஒரு அதிரடிக்கு தயாராகி விட்டது கடந்த மார்ச் மாதம் உச்சநீதிம ன்றம் இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை பிரதமர் லோக்சபாவின் எதிர்கட்சி தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய குழு அளிக்கும் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி அவர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி இருந்தது.
இதன் படி இது வரை மத்திய அமைச்சரவையின் பரிந்துரை படி தேர்வு செய்யப்பட்ட தலைமை தேர்தல் ஆணையரை இனி பிரதமர் எதிர்கட்சி தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோ ர் அடங்கிய குழு தான் முடிவு செய்யும் என்கிற நிலைமை உருவானது.
இருந்தாலும் இந்த தீர்ப்பை நாடாளுமன்றத்தில் உருவாக் கப்படும் சட்டம் மூலம் மாற்றி கொள்ளலாம் என்றும் 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பு தலைமை தேர்தல் கமிசனர் தேர்வு குறித்த பொது நல வழக்கில் தீர்ப்பு அளித்து இருந்தது.
இதை வைத்தே உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு தடை போட விரும்பிய மத்திய அரசு தலைமை தே ர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்கும் குழுவில் இருந்து உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதியை அகற்றி விட்டு அவருக்கு பதிலாக கேபினேட் அமைச்சர் மூலமாக தலைமை தேர்தல்அதிகாரியை தேர்வு செய்யும் விதமாக சட்டம் கொண்டு வர இருக்கிறது.
உச்சநீதிமன்றம் டெல்லி அரசுக்கு அதிகாரம் வழங்கும் தீர்ப் பில் கூட மத்திய அரசு விரும் பினால் இந்த தீர்ப்பை ரத்து செய்யும் வகையில் புதிய சட்டத்தை உருவாக்கி கொள்ளலா ம் என்று ஆலோசனை கூறி இ ருந்தது. இப்பொழுதும் உச்சநீதிமன்ற ம் அளித்த ஆலோசனையின்படியே தலைமை தேர்தல் ஆனையர் தேர்வு குழுவில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை மத்திய அரசு நீக்க இருக்கிறது.
தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் ஆகியோரை தேர்வு செய்யும் குழுவிலிருந்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கும் மசோதாவை, ராஜ்யசபாவில் நேற்று மத்திய அரசு தாக்கல் செய்தது.