அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜியின் நீதிமன்ற மன்ற காவல் நேற்றுடன்முடிவடைந்தது. இந்த நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக 120 பக்க குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்த அமலாக்கத் துறை அதிகாரிகள், வழக்கு தொடர்பான சுமார் 3,000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை ஓர் இரும்புப் பெட்டியில் வைத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
மேலும் அமலாக்க துறை அதிகாரிகள்,செந்தில் பாலாஜியை கடந்த 5 நாட்களாக விசாரணை நடத்தி வந்துள்ளார்கள். 300 க்கும் மேற்பட்ட கேள்விகளை தயார் செய்து விசாரித்தனர். இதற்கு பல கேள்விகளுக்கு தம்பி அசோக்குமார் க்கு தான் தெரியும் எனக்கு தெரியாது என பதிலளித்துள்ளார் செந்தில் பாலாஜி.
இந்த விசாரணை முழுதுவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. இன்னொரு பக்கம், செந்தில் பாலாஜி கூறிய பதில்கள், ஆடியோவும் பதிவு செய்யப்பட்டதாம். இதைத் தவிர சுருக்கெழுத்தாளர்கள் சிலரும், பதில்களை குறிப்பு எடுத்து உடனுக்குடன் ‘டைப்’ செய்து பைல் செய்தனராம்.
தினமும் விசாரணை முடிந்த பின், செந்தில் பாலாஜி என்ன சொன்னார் என்கிற தகவல், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்குதெரிவித்து வந்துள்ளார்கள் அமலாக்க துறையினர். செந்தில் பாலாஜியின் விசாரணையை அமித் ஷா கவனமாக கண்காணித்து வருகிறார்.
செந்தில் பாலாஜி வாயை திறந்தால் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் நடக்கும் என்பதாலும் கட்சி மோதல்கள் வெடிக்கும் என உளவுத்துறை அமித் ஷாவிடம் ரிப்போர்ட் அளித்துள்ளார்களாம் . இதன் காரணமாகவே செந்தில் பாலாஜியின் வழக்கை தீவிரமாக கண்காணித்து வருகிறாராம் அமித் ஷா மேலும் எப்போது வேண்டுமானாலும் துணை இராணுவத்தை தமிழகத்தில் இறக்குவதற்கு தயாராக உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
மேலும் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு அமலாக்க துறை பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் இன்னமும் ஆஜராகவில்லை. அவர் தலைமறைவாகிவிட்டார். ஆனால், அவர் எங்கிருக்கிறார் என்பதை அமலாக்க துறை கண்டுபிடித்துவிட்டதாம்.
மேலும் அசோக் குமார் பிசினஸ் ரீதியாக யாருடன் தொடர்பு வைத்துள்ளார்கள் என்பது குறித்தும் அமலாக்கத்துறைக்கு தகவல் ஆவணங்கள் சிக்கியுள்ளது. தற்போது கிடைத்த தகவல்கள் பார்த்து அதிர்ந்து விட்டது அமலாக்கத்துறை.
தமிழகத்தில் மிகப்பெரிய அதிகாரமிக்க பொறுப்பில் உள்ள ஒரு முக்கிய அரசியல்வாதியின் பெயரும் இடம்பெற்றுள்ளதால் இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம் என்கின்றனர் அமலாக்க அதிகாரிகள்.