விடுதலை சிறுத்தைகள் கட்சியில் புதிய நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் திருமாவளன் வெளியிட்டார். இதில் பழைய நிர்வாகிகள் பலபேரை கழட்டி விட்டார், கட்சிக்காக சிறை சென்ற நிர்வாகிகளையும் புதிய பட்டியலில் சேர்க்கவில்லை. இதனிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெண் மாவட்டச் செயலாளர் ஒருவர், தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கூறி மேடையில் கண்ணீர் விட்டு அழுதார்.
இதனிடையேவிடுதலை சிறுத்தைகள் கட்சியில் பதவி பறிக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் பதவியை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த நிர்வாகிகள் புதிதாக பதவிக்கு வந்துள்ளவர்களுக்கு அவர்களால் முடிந்த அளவு தொல்லை தர ஆரம்பித்துள்ளனர். தொல்லைகள் மிஞ்சும் அளவிற்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது.
கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டத்தில் விசிக பெண் மாவட்டச் செயலாளருக்கு கொலைமிரட்டல் விடுக்கும் வகையில் அக்கட்சி நிர்வாகிகள் சென்றுள்ளார்கள். கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதிய செயலாளராக வேல் பழனியம்மாள் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய மாவட்டச் செயலாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய அவர், மனம் உடைந்து கண்ணீர் விட்டு அழுததுடன் தனது கணவர் பாதுகாப்புடன் தாம் செல்ல வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.
தன்னிடம் பேசக்கூடாது, தாம் சொல்வதை கேட்கக்கூடாது என நிர்வாகிகளை சிலர் தடுத்து வருவதாக குமுறினார். இதேபோல் தான் பல மாவட்டங்களிலும் விசிக புதிய நிர்வாகிகள் இடையூறுகளை சந்தித்து வருகின்றனர். இதனிடையே இந்தப் பிரச்சனை விசிக தலைவர் திருமாவளவனுக்கு புது தலைவலியை கொடுத்திருக்கிறது. அதிருப்தி நிர்வாகிகளை சரிகட்டும் பணி தொடங்கியுள்ளது. பதவி கிடைக்கவில்லை என்பதற்காக யாரும் வருந்தத் தேவையில்லை என்றும் விரைவில் உரிய அங்கீகாரம் தரப்படும் எனவும் சமாதானப் படலம் நடந்து வருகிறது.
திருமாவளவன் கட்சிக்குள் நடக்கும் பிரச்சனைகளை களைத்துவிட்டு பொதுப்பிரச்சனை பற்றி பேசலாமே என நிர்வாகிகள் கொந்தளிப்புடன் காணப்டுகிறார்கள்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















