இந்தியாவின் 77 வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலகமாக நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. பாரத பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். தேசிய கொடியை ஏற்றுவதற்கு முன்னர் பிரதமர் மோடி டெல்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின முப்படைகளின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து செங்கோட்டையில் சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்றால் அது “இந்தியா தான் இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களும் என் குடும்பத்தினர் தான்.
வெளிநாட்டினர் நமது நாட்டிற்குள் புகுந்து வளங்களை கொள்ளையடித்தனர். நமது நாட்டை வலிமையுடன் கட்டமைக்கும் பணியில் நமது கவனம் உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பலமே பெண்களும், இளைஞர்களும் தான். இந்தியாவில் இளைஞர்களின் சக்தி அதிகமாக உள்ளதால் உலகிற்கே இந்தியா மிகப் பெரிய நம்பிக்கை விதைத்துள்ளது. இளைஞர்களின் சக்தியே நமது பலம் வருங்கால இந்தியாவை தானாக உருவாக்கி கொள்ளும் சக்தியை இந்தியா கொண்டுள்ளது.
நான் மேற்கொண்டுள்ள பயணத்தில் தடுமாற்றமோ, பாதை விலகலோ இல்லை. வேற்றுமையில் ஒற்றுமை ஜனநாயகம் நாட்டின் மக்கள் தொகை இவைதான் நமது சக்தியாகும். டிஜிட்டல் இந்தியா திட்டம் எப்படி செயல்படுகிறது என்பதை அறிய உலகமே விரும்புகிறது. உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக இந்தியா உருவாகியுள்ளதற்கு இந்தியாவில் உழைக்கும் மக்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய நம்பிக்கையோடு இந்தியா பயணித்துக் கொண்டிருக்கிறது. பிரதம மந்திரியின் முத்ரா யோஜனா திட்டத்தால் இந்தியாவில் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. அடுத்த மாதம் பாரம்பரிய திறமைகளை கொண்ட மக்களுக்கு உதவுவதற்காக ரூ.15,000 கோடி மதிப்பில் விஸ்வகர்மா யோஜனா திட்டம் செயல்படுத்தப்படும்.
கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. ஏழைகளை மேம்படுத்துவதற்காகத்தான் கரிப் கல்யாணி யோஜனா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எங்களுக்கு வாக்களித்தால் சீர்திருத்தத்திற்காக உழைப்போம், வறுமைக் கோட்டில் இருந்து 12.5 லட்சம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். 200 கோடி கொரோனா தடுப்பூசிகளை நாட்டு மக்களுக்கு வெற்றிகரமாக செலுத்தியுள்ளோம். வரும் 2047ம் ஆண்டிற்குள் வளர்ந்த இந்தியா என்ற நிலையை அடைய ஓய்வின்றி உழைத்து வருகிறோம்” என பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்துள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















