இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பாரத பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் கொடி ஏற்றினர் அதே போல நாடு முழுவதும் சுதந்திர தினத்தை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து மாநிலங்களிலும் அரசு அலுவலங்களில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தி வருகிறார்கள்.
அதேபோன்று தமிழக முழுவதும் உள்ள அனைத்து உள்ளாட்சி அலுவலகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் இன்று தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தப்படுகிறது.
இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சி ஒன்றில் கும்பகோணம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் தேசிய கொடி ஏற்றும் போது கொடி அறுந்து கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
மேலும் தேசியக் கொடி அறுந்து கீழே விழுந்ததும் அருகில் இருந்த நபரை திமுக சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் அடிக்க பாய்ந்தார். இந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. திமுகசட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் தேசிய கொடி ஏற்றும் போது கொடி கீழே விழுந்தது மற்றும் அருகில் இருந்தவரை அடிக்க பாய்ந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.