சென்னை ஓட்டேரி காவல்நிலையத்தில் ஏட்டாக இருப்பவர் கோதண்டபாணி. இவர் நேற்று சுதந்திர தினத்தன்றுதனது மகளுக்கு நீதி கேட்டு சாலையில் தர்ணாவில் ஈடுபட்டார்.
கோதண்டபாணி மகள் சிறுநீரக பிரச்சனையால் அவதிபட்டு வந்துள்ளார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் மகளை சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், மகளை சிகிச்சைக்காக ஏட்டு சேர்த்துள்ளார். எழும்பூர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால் சிறுமியின் வலது கால் அழுக ஆரம்பித்துள்ளது. ஒருகட்டத்தில் அதை அகற்ற வேண்டிய நிலைமையும் வந்துவிட்டது.
சிறுநீரக பிரச்சினைக்கு சிகிச்சை தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் குழந்தைக்கு கால் போய்விட்டதே என்று மனம் நொந்து போனார் ஏட்டு கோதண்டபாணி. இதுகுறித்து எழும்பூர் மருத்துவமனை நிர்வாகித்திடம் முறையிட்டார். இதுகுறித்து அரசு மருத்துவமனை சார்பாக எந்த வித முடிவும் சொல்லவில்லை.
இதன் காரணமாக மேலும் நொந்துபோன ஏட்டு கோதண்டபாணி, இதன் காரணமாக ஏட்டு நீதி கேட்டு போராட்டம் நடத்த முடிவு செய்தார். கடந்த ஏப்ரல் மாதம், சட்டமன்ற கூட்ட தொடரின் போது சட்டமன்ற வளாகத்தின் முன் தர்ணா செய்தார்.இது பெரும் பரபரப்பை கிளப்பியது. இதனை தொடர்ந்து உடனடியாக இதுகுறித்து குழு அமைத்து விசாரணை நடத்த சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவோடு சரி, எந்த குழுவும் கடைசிவரை அமைக்கப்படவில்லையாம்.
மீண்டும் தர்ணா: ஏற்கனவே நொந்து போயிருந்த கோதண்டபாணி, இப்போது மேலும் விரக்திக்கு ஆளானார்.. இதையடுத்து, இன்று மதியம் மறுபடியும் தர்ணாவில் ஈடுபட்டார். தன்னுடைய மகளுடன் சுதந்திர தினத்தன்று மதியம் டிஜிபி அலுவலகத்திற்கு வந்த அவர், நடுரோட்டிலேயே உட்கார்ந்து தர்ணா செய்தார். இதனால், மீண்டும் பரபரப்பு அங்கு ஏற்பட்டது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஏட்டு கோதண்டபாணி, “இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 77-வது வருஷத்தை கொண்டாடிட்டு இருக்கோம். ஆனால் என் மகளுக்காக 2 வருடங்களாக நான் போராடிட்டு இருக்கேன்.ஆனால், நீதி கிடைக்கவில்லை, குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சர் சொன்னார். ஆனால், குழுவும் அமைக்கப்படவில்லை.
சான்றிதழ்: தேசிய குழந்தைகள் ஆணையம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. அதன்பிறகு 4 மாதங்களுக்கு பிறகு இப்போது அவருடைய மகளுக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்குவதாக குழந்தைகள் நல ஆணையம் சொல்கிறது.
என் குழந்தைக்கு ஊனமுற்றோர் சான்றிதழ் தருவதாகவும், பென்ஷன் தருவதாகவும் சொல்வதில் என்ன நியாயம்? குழந்தையை ஊனமாக்கிவிட்டு, ஊனமுற்றோர் சான்றிதழ் தருவதாக சொல்வது சரியா? இதுதான் இந்தியாவின் நிலைமையா?
என்னுடைய குழந்தைக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.. இல்லாவிட்டால், என்னையும், என் மகளையும் கருணை கொலை செய்துவிடுங்கள்.. அதுவரை போராட்டம் நடத்தி கொண்டேதான் இருப்பேன்” என்று கண்ணீருடன் ஆவேசமாக கூறினார்.