தி.மு.கவின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் யுடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி ஒன்று கொடுத்தார். அப்போது நெறியாளர் அஜித் விஜய் பற்றி கேள்வி எழுப்பியபோது அஜித் என்றால் யார் என நெறியாளரிடம் கேட்டார். இந்த வீடியோ வைரலாக அஜித் ரசிகர்கள் கொந்தளித்து திமுகவை வச்சு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அஜித்.எந்த வித சிக்கலில் சிக்காமல் தனெக்கென்றுஒரு பாதையை அமைத்து கொண்டு அவரின் வேலையை செய்து வருபவர். அதுமட்டுல்லாமல் ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்தாலே ரசிகர் மன்றம் வைக்கும் இந்த காலகட்டத்தில் உச்ச நடிகராக இருக்கும் அஜித் தனது ரசிகர் மன்றத்தை கலைத்தார்.
ஆனாலும் அவர்மீது வெறித்தனமாக அன்பு வைத்துள்ளார்கள் அஜித்தின் ரசிகர்கள். பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் அஜித். இவரது திரைப்பட ரிலீஸை திருவிழா போல களைகட்ட வைப்பார்கள் ரசிகர்கள். மேலும் அவர் செய்துள்ள உதவிகளை வெளியில் சொல்வதில்லை . பல உதவிகளை செய்துவரும் அஜித் வெளியில் காட்டாமல் இருந்தாலும் அவரால் உதவி பெற்றவர்கள் உலகுக்கே தெரிவித்துவிடுகிறார்கள்.
அஜித்எனும் நடிகரை தாண்டி மனிதாபிமானம் கொண்ட நல்ல மனிதன். என்பதால் வீட்டில் உள்ள அனைவருக்கும் அஜித்தை பிடிக்கிறது. அடுத்த எம்.ஜி.ஆர் அஜித் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஜீத் என்றால் பிடிக்கும். அதை வைத்தே அஜீத் தான் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்று பல கதைகள் உலாவின. அஜீத் அரசியலுக்கு வரப்போகிறார் என்று பரபரப்பாக பேசப்பட்டது.
அதிக ரசிகர்களைப் பெற்றிருப்பதில் எம்.ஜி.ஆர்.-க்கு அடுத்து அஜித்தான் என நடிகரும், விமர்சகரும், மூத்த பத்திரிக்கையாளருமான சோ ராமசாமி கூறினார்.
பத்திரிக்கையாளரும், நடிகருமாகிய சோ ராமசாமி ஒருவரை பாராட்டுவது என்பது அதிசயமான நிகழ்வுதான். விமர்சனமின்றி, குறைகளை சுட்டிக்காட்டாமல் அவர் எந்த ஒரு ஆளுமையையும் இதுவரை பாராட்டியது இல்லை என்று கூறலாம்.
இந்த நிலையில் ஒரு பக்கம் விஜயின் லியோ படப்பிடிப்பு பெரிய நடிகர்களின் பட்டாளத்துடன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பாடல்கள், கிளிம்ஸ் காட்சிகள் வெளியாகின்றன. இதனால் அஜித் ரசிகர்கள் துவண்டு போய் இருந்தனர். இந்நிலையில் தான் துரைமுருகனின் அஜித் யாரு என்ற பேச்சு அவர்களை உசுப்பேத்தி விட்டிருக்கிறது.
பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா மேடையில் தி.மு.க., அரசு எப்படி நடிகர்களை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து ஆட்சியாளர்களை பாராட்டச் சொல்லி தர்மசங்கடப் படுத்துகிறது என அஜித் பேசியதை எடுத்துப் போட்டு இவர் தான் அஜித் என பதிலளித்து வருகின்றனர்.
அஜித்தின் பேச்சை அப்போது ரஜினியே எழுந்து நின்று கை தட்டி பாராட்டியதையும் இந்த விவகாரத்தை ஜெயலலிதா கையில் எடுத்து அரசியல் செய்ததையும், அதனால் தி.மு.க., அரசு நெருக்கடியை சந்தித்த பழைய கதையை எல்லாம் இப்போது பேசு பொருளாக்கி உள்ளனர்.
ஏற்கனவே நீட் தேர்வு விஷயத்தில் கையை பிசைந்து கொண்டிருக்கும் தி.மு.க.,வுக்கு அமைச்சர் துரைமுருகனால் புது பிரச்னை ஏற்பட்டுள்ளது. முன்னதாக நடிகர் விஜயின் அரசியல் மூவை விமர்சித்து தி.மு.க., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















