அமலாக்கத்துறையின் பிடியில் தி.மு.கவின் முக்கியமான அமைச்சர்கள் வரிசையாக சிக்கி வருவதால் விழி பிதுங்கி நிற்கிறது. ஒருபக்கம் அமலாக்கத்துறை என்றால் மற்றொரு பக்கம் உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்களில் விடுவிக்கப்பட்ட வழக்குகளை உயர்நீதிமன்றம் தாமாக வந்து மீண்டும் விசாரிக்க ஆரம்பித்துள்ளது. தி.மு.க மத்தாளம் போல் இரு பக்கமும் அடி வாங்கி கொண்டு இருக்கிறது.
செந்தில் பாலாஜி,பொன்முடியை தொடர்ந்து கீழமை நீதிமன்றம் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து கீழமை நீதிமன்றத்திலிருந்து விடுதலை செய்யப்பட்ட அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோரின் வழக்க்குகளை தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீண்டும் விசாரிக்க தொடங்கினார். இது திமுகவிற்கு பெரும் அதிர்ச்சி கொடுத்தது.
இதிலிருந்து மீள்வதற்குள் அண்ணாமலை அமலாக்க துறையின் அடுத்த டார்கெட் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் மூர்த்தி,கீதா ஜீவன், என ஒரு லிஸ்டை சொன்னார். இது அறிவாலயத்தை அசைத்து பார்த்தது சரி சமாளிக்கலாம் என்று மூச்சு விடுவதற்கு முன் அறிவாலயத்தில் அடுத்த இடியை இறக்க அமலாக்கத்துறையினர் தயாராகி வருகின்றார்கள் இது பெரிய லிஸ்ட் என்கிறது டெல்லி வட்டாரம்.
தமிழக அரசியல்வாதிகள் குறித்த விவகாரங்களை, அமலாக்கத்துறையின் கூடுதல் இயக்குனர் கவனித்து வருகிறார். தமிழகத்தில் நடைபெறும் சட்ட விரோத பணபரிமாற்றம் தொடர்பான வழக்குகள், விசாரணைகளை இவர் தான் கண்காணித்து வருகிறார்.இவர், ஓய்வின்றி வேலை பார்த்து வருகிறாராம். காரணம், தமிழக அரசியல்வாதிகள் மீதுள்ள வழக்குகள் தான். இப்போது, இவருடைய மேஜையில் புதிய ‘ரெய்டு லிஸ்ட்’ உள்ளதாம்.
இந்த லிஸ்டில், 18 தமிழக சீனியர் அரசியல்வாதிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாம். இவர்கள் அனைவருமே தி.மு.க வைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு எதிராக கிடைத்துள்ள ஆதாரங்களை வைத்து, எப்போது ரெய்டு நடத்தலாம் என திட்டமிடப்பட்டு வருகிறதாம். இந்த தி.மு.க.தலைவர்களுக்கு, செப்டம்பர்- -அக்டோபர் மாதங்களில் பெரிய பிரச்னை வர உள்ளது என்கின்றனர் அதிகாரிகள்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்திய போது, ‘நாங்க திருப்பி அடிச்சா தாங்க மாட்டீங்க’ என பா.ஜ., அரசை எச்சரித்து, தமிழக முதல்வர் ஸ்டாலின், ‘வீடியோ’ வெளியிட்டிருந்தார். அமலாக்கத்துறை வைத்திருக்கும் புதிய லிஸ்ட் படி, தி.மு.க., தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போது, இப்படி இன்னும் பல வீடியோக்களை அவர் வெளியிட நேரிடும் என சிலர் கிண்டலடிக்கின்றனர்.