உதயநிதியின் தாத்தாவால முடியல அப்பாவா முடியல… ஹிந்து மதத்தை அழிக்க முடியாது! வானதி சீனிவாசன் சுளீர்!
தமிழக விளையாட்டு துறை அமைச்சர், சமீபத்தில், சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவரது இந்த பேச்சு ஹிந்துக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பொது மக்கள் முதல் மத்திய அமைச்சர்கள் வரை உதயநிதிக்கு தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்துவருகின்றனர்.
பல்வேறு தரப்பிலிருந்து அவர் பதவியேற்பின்போது எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு முரணாக பேசியுள்ளார் என்று குற்றம்சாட்டிவருகின்றனர். குறிப்பாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் திருமதி.வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ அவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தை ஒழிப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்ட அமைச்சர் பேசலாமா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு திருமதி.வானதி சீனிவாசன் கொடுத்த பேட்டியின் சாராம்சத்தை பார்ப்போம் :
*உதயநிதி மட்டுமல்ல அவர்களுடைய அப்பா, தாத்தா காலத்திலிருந்து அவர்களது குடும்ப பெண்கள் கோவிலுக்கு போவதை அவர்களால் தடுக்க முடியவில்லை.
*உதயநிதி மட்டுமல்ல அவரது எத்தனை தலைமுறைகள் வந்தாலும் இந்த நாட்டிலிருந்து சனாதனம் என்கின்ற ஹிந்து மதத்தை அழிக்க முடியாது.
*திராவிட முன்னேற்ற கழகம், திராவிடர் கழகம் அவர்களுடன் இணைந்திருக்கக்கூடிய சில அமைப்புகள் ஹிந்து மதத்திற்கு எதிராக மட்டுமே பேசிவருகிறார்கள். இவர்கள் மற்ற மதங்கள் பற்றி பேசுவார்களா ?
*ஹிந்து மாதத்தில் இருக்கின்ற மக்களை சிறுபான்மை மதங்களுக்கு மதம் மாற்றுகின்ற முயற்சியின் ஒரு பகுதியாக உதயநிதி ஸ்டாலின் பேச்சு அமைந்திருக்கிறது.
*ஹிந்து மாதத்தில் இருக்கின்ற மக்களை சிறுபான்மை மதங்களுக்கு மதம் மாற்றுகின்ற முயற்சியின் ஒரு பகுதியாக உதயநிதி ஸ்டாலின் பேச்சு அமைந்திருக்கிறது.
*சனாதனம் என்பது ஹிந்து தர்மத்தை குறிப்பிடுகிறது. நீடித்து நிலையாக நிற்கக்கூடிய ஒரு வாழ்வியல் நெறி சனாதனம் என்பதை .உச்ச நீதிமன்றமே சொல்கிறது.
இவ்வாறு உதயநிதி பேச்சுக்கு திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் அவரது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.