வட்டிக்கு காசு வாங்கி தயாரிக்கப்பட்ட சிலைகளுக்கு சீல்… கண்ணீருடன் கெஞ்சிய பெண் : அதிகாரிகளுக்கு சரமாரிக் கேள்வி!!!
ஆண்டு தோறும் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதற்காக பல்வேறு அமைப்புகள் கோவில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத வகையில் விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும், குறைந்த அளவிலான உயரம் கொண்ட விநாயகர் சிலைகளை வைப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.
விநாயகர் சிலைகள் வீடு மற்றும் பொது இடங்கள், கோவில்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு அதை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.
இந்த நிலையில், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்ககேட் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் விநாயகர் சிலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த சிலை தயாரிப்பு கூடத்தில் சுமார் 400 விநாயகர் சிலைகள் தயார் நிலையில் இருந்தது.
இன்று திடீரென்று சோதனை மேற்கொண்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் 400 சிலைகளுடன் இருந்த கூடத்திற்கு சீல் வைத்தனர்.சிலை தயாரிப்பு விதிகளை மீறி சிலை தயாரிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட இரண்டு நாட்கள் தான் இருக்கும் நிலையில் சிலை தயாரிப்பு கூடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தது திட்டமிட்ட சதியா என்ற கேள்வி எழும்பி உள்ளது.
விநாயகர் சிலை செய்யும் அக்குடும்பத்தாரின் பெண்கள் எல்லாம் வட்டிக்கு காசு வாங்கி பண்ண சிலைங்க அய்யா, தயவு செஞ்சி விட்டுடுங்க…”காவலர்களிடம் கண்ணீர் மல்க கெஞ்சிய பெண்.. இந்த வீடியோவானது மனதை வலிக்க செய்துள்ளது.
விநாயகர் சிலை கூடத்திற்கு சீல் வைக்கும் தகவல் அறிந்த சிவசேனா கட்சி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்பினர் மற்றும் சிலைகளுக்கு ஆர்டர் கொடுத்தவர்கள் அப்பகுதியில் திரண்டு அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு விநாயகர் சிலை கூடத்திற்கு வருவாய் துறை, காவல் துறையினர் சீல் வைக்க போவதாக தகவல் பரவியது. இதையடுத்து விநாயகர் சிலை தயாரிப்பு கூடத்தில் இந்து அமைப்பு நிர்வாகிகள் குவியத் தொடங்கினர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















