கனடாவில், காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில், இந்திய ஏஜென்ட்கள் பங்கு இருப்பது குறித்த தகவல்களை, கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்திய அரசிடம் பகிர்ந்து கொண்டோம்” என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.
தற்போதைய சூழலில் இந்தியாவிற்கு எதிரான பிரச்னையில் கனடா ஈடுபடுவது என்பது யானைக்கு எதிராக எறும்பு போருக்கு செல்வதை போன்றது என அமெரிக்காவின் பென்டகனைச் சேர்ந்த முன்னாள் அதிகாரி கூறியுள்ளார்.
பென்டகனின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் என்பவர் கூறியதாவது: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகள் இந்தியாவை விட கனடாவுக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி உள்ளது.
இரு நண்பர்களில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற நெருக்கடி அமெரிக்காவுக்கு வராது என கருதுகிறேன். ஆனால், கனடா மற்றும் டில்லியில் யாரேனும் ஒருவரை தேர்வு செய்ய வேண்டுமானால், இந்த விவகாரத்தில் இந்தியாவையே அமெரிக்கா தேர்வு செய்யும். இதற்கு ஹர்தீப் சிங் நிஜ்ஜார் ஒரு பயங்கரவாதி என்பதே காரணம். இந்தியா மிகவும் முக்கியமானது. இந்தியாவுடனான உறவு முக்கியம்.
பல்வேறு விவகாரங்களில் கனடாவை காட்டிலும் இந்தியா தான் அமெரிக்காவிற்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழலில் இந்தியாவிற்கு எதிரான பிரச்னையில் கனடா ஈடுபடுவது என்பது யானைக்கு எதிராக எறும்பு போருக்கு செல்வதை போன்றது.
கனடாவில் ட்ரூடோவிற்கு குறைவான ஆதரவே காணப்படுகிறது. அவர் பதவியில் இருந்து விலகிய பிறகு, கனடா உடனான நட்புறவை அமெரிக்கா கட்டமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.