காசாவில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 500க்கு மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையிலான போர் நேற்று, 12 வது நாளாக தொடர்ந்தது வருகிறது. இந்த நிலையில், காசாவில் உள்ள அல்-அக்லி அரபு மருத்துவமனையில் நேற்று ஏவுகணை தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் 500 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
போரால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களும், தாக்குதலுக்கு பயந்து மருத்துவமனையில் தஞ்சமடைந்தவர்களும் இந்த குண்டுவெடிப்பில் இதனிடையே, காசா மருத்துவமனை குண்டுவெடிப்பு யாரால் நிகழ்த்தப்பட்டது என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் கிடைக்கவில்லை.
காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலாலேயே 500 பேர் உயிரிழந்ததாக ஹமாஸ் ஆயுதக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது. இந்நிலையில், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள இஸ்ரேல் பாதுகாப்புப்படை, காசாவில் செயல்பட்டு வரும் பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் ஆயுதக்குழு ஏவிய ராக்கெட்டே காசா மருத்துவமனை மீது விழுந்ததாக வீடியோவையும் வெளியிட்டுள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















