தற்போது தமிழகத்தில் சீட்டு கம்பெனி மோசடிகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பிரபலமான நடிகர்களை வைத்தும் அதிக வட்டி செய்கூலி இல்லை சேதாரம் இல்லை என பல சலுகைகள் வழங்குவதாக கூறி மக்களை ஏமாற்றும் சீட்டு கம்பெனி மோசடிகள் வரிசையில்இணைந்துள்ளது திருச்சி கரூர் சாலையில் பிரணவ் ஜுவல்லரி இந்த நகைக்கடைக்கு விளம்பரம் செய்தவர் பிரகாஷ்ராஜ்.
பிரகாஷ்ராஜின் நகை விளம்பரத்தால் பொதுமக்கள் கண்ணீர் வடிக்கும் தகவல் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. திருச்சி கரூர் சாலையில் பிரணவ் ஜுவல்லரி இந்த நகை கடையினை பிரபலப்படுத்த பிரகாஷ்ராஜ், வாணி போஜன் உட்பட இன்னும் சில பிரபலங்களை வைத்து விளம்பரம் எடுத்திருக்கிறார்கள்.
அதில் 0 சதவீதம் செய்கூலி, சேதாரம் கிடையாது. ஒரு கிராமுக்கு 4000 ரூபாய் சேமிக்கலாம், கல்யாணத்திற்கு தேவையான மொத்த நகையின் மூலம் ₹40,000 சேமிக்கலாம் என்றெல்லாம் பிரகாஷ்ராஜ் சொல்லி அள்ளி விட்டுள்ளார் பிரகாஷ் ராஜ் .
பிரணவ் ஜுவல்லரி :
இதை நம்பி திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள மக்கள் தாங்கள் சேர்த்து வைத்திருந்த பணத்தை வைத்து நகை எடுத்து இருக்கிறார்கள். இன்னும் சிலர் இந்த ஜுவல்லரியில் நகை சீட்டும் கட்டி வந்திருக்கிறார்கள்.
500 ரூபாயில் தொடங்கி இலட்சக்கணக்கில் வரை நகை சீட்டுகள் கட்டப்பட்டிருந்தது. அது மட்டும் இல்லாமல் இந்த நகை நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஆறு மாதத்தில் நிறைய லாபம் கிடைக்கும் என்றெல்லாம் ஆசை வார்த்தை சொல்லி கூறியிருக்கிறார்கள்.
இதனால் மக்களும் நம்பி தங்களிடம் இருந்த பணத்தை முதலீடு செய்திருக்கிறார்கள். தற்போது பிரணவ் ஜுவல்லரி முதலாளிகள் மொத்த பணத்தையும் அபேஸ் செய்து ஓடிவிட்டார்கள். இதை அறிந்த பொதுமக்கள் கடையின் முன்பு கண்ணீர் மல்க அழுது போராட்டம் செய்திருக்கிறார்கள். தற்போது இந்த சம்பவம் தான் திருச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதற்கு பலரும் பிரகாஷ்ராஜை திட்டி தீர்த்து வருகின்றனர். இதற்கு பிரகாஷ்ராஜ் தரப்பில் என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.பெரும்பாலும் பிரகாஷ் ராஜ் அவர்கள் வில்லன் கதாபாத்திரத்தில் தான் கலக்கி இருக்கிறார்.
அதிலும், சமீபகாலமாக பிரகாஷ் ராஜ் அவர்கள் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து கொண்டு இருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் கம்யூனிசம் பேசுவார்.பொதுவெளியில் அரசியல் பேசுகிறேன் எனக்கூறி வன்மத்தை காக்குவர்.
கம்யூனிசம் பேசும் பிரகாஷ்ராஜ் மக்கள் கண்ணீருக்கு என்ன சொல்லப்போகிறாரோ பார்ப்போம்.. மக்களே இனி விழித்து கொள்ளுங்கள் காசு வாங்கி கொண்டு ஒரு நிறுவனத்தின் உண்மை தன்மை அறியாமல் நடித்து கொடுக்கும் நடிகர்களை நம்பி ஏமாறாதீர்கள்.