கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பங்குகள் ‛‛யங் இந்தியா” நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக மாற்றப்பட்டது தொடர்பாகவும், ஏ.ஜே.எல் பங்குதாரர்கள் ஒப்புதல் பெறப்படாதது குறித்தும் புகார் கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ராகுல், மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரிடம் ஏற்கனவே அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடையதாக கூறப்படும் ஏ.ஜே.எல் எனப்படும் அசோசியேட் ஜெர்னல் லிமிடெட், யங் இந்தியா ஆகிய நிறுவனங்கள் மீதான பண மோசடி வழக்கில் ரூ. 751.09 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
இது குறித்து, பா.ஜ., செய்தி தொடர்பாளர் ரவி சங்கர் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் தலைமையிடம், சோனியா, ராகுல் மற்றும் பிரியங்காவிடம் பா.ஜ., கேள்விக் கேட்க விரும்புகிறது.
சுதந்திர இயக்கத்தின் சொத்துக்களையும் காங்கிரஸ் சொந்தமாக்கியுள்ளது. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதாக காங்கிரஸ் கட்சி எப்போதும் கூறுகிறது.
கட்சியின் பாரம்பரியத்தை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் சொத்துகளையும் காங்கிரஸ் தங்கள் வசப்படுத்தியது, நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை சொத்துக்களை முடக்கியதன் மூலம் தெரியவந்துள்ளது. என பாஜ., செய்தி தொடர்பாளர் முன்னாள் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் விமர்சனம் செய்துள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















